சென்னையில் ‛ஸ்பா’ என நுழைந்த போலீசார்.. உள்ளே நடந்த விபசாரம்.. முக்கிய நபர் கைது.. பெண்கள் மீட்பு!
சென்னை அண்ணாநகர் திருமங்கலம் ரோட்டில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: சென்னையில் பெண்களை ஒரு கும்பல் விபசாரத்தில் தள்ளிவருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி அங்கு வரும் வாடிக்கையாளர்களுடன் இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
சென்னையில் சில நபர்கள் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் சமீபகாலமாக ஆன்லைன் மூலம் விபசாரம் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுதவிர அழகுநிலையம் என்ற பெயரில் விபசாரத்தை சிலர் செய்வதாக கூறப்படுகிறது. வேலை தருவதாக கூறி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்த வரும் கும்பல் இத்தகைய பாலியல் தொழில் மூலம் காசு பார்த்து வருகின்றனர்.

சென்னை விபசாரம்
இந்நிலையில் தான் சென்னையில் விபசாரத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபசார தடுப்பு பிரிவு போலீசார் அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு பெண்களை மீட்டு வருவதோடு, அவர்களை விபசாரத்தில் தள்ளிய நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது அண்ணாநகரில் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களை போலீசார் மீட்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:

அழகு நிலையத்தில் சோதனை
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் அழகு நிலையம் மற்றும் ஸ்பாவில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அண்ணாநகர் திருமங்கலம் ரோட்டில் குறிப்பிட்ட முகவரியில் அழகு நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அங்கு பாலியல் தொழில் நடப்பதை போலீசார் அறிந்தனர்.

இளைஞர் கைது
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அழகு நிலையத்தில் அழகு நிலையம் நடத்தி வரும் நபர் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அழகு நிலையம் வரும் வாடிக்கையாளர்களுடன் அவர்களை உறவு வைத்து கொள்ள கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வில்லிவாக்கத்தை சேர்ந்த முனியாண்டி (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

பெண்கள் மீட்பு
மேலும் முனியாண்டியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரது அழகு நிலையத்தில் இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் 2 பேரும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications