அப்படியே வாயோடு வாய் வைத்து.. எதை பத்தியும் யோசிக்கலையே.. சபாஷ் வீரர்.. வைரலாகும் வீடியோ!
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியானார்
சென்னை: எதை பத்தியும் யோசிக்கலையே... விஷவாயு தாக்கி மயங்கிய நபரை... அப்படியே வாயோடு வாய் வைத்து... தன் மூச்சு கொடுத்து உயிரை காப்பாற்ற போராடும் ஒரு வீரரின் வீடியோ வைரலாகி வருகிறது.. பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது!
சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.. அந்த பள்ளி வளாகத்தின் செப்டிக் டேங்கினை சுத்தம் படுத்தும் பணி நடந்துள்ளது.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக, மதுரவாயலை சேர்ந்த பாலா, பிரதீப், கார்த்தி, ஜெகன் என 4 பேர் வரவழைக்கப்பட்டனர்.. அந்த கழிவுநீர் தொட்டி கிட்டத்தட்ட 15 அடி ஆழம் இருக்கும்... முதலில் அதில் உள்ள கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.

கழிவுநீர் தொட்டி
இதற்கு பிறகு தொட்டியின் அடியில் சகதி, சேர், அழுக்குகள் தங்கியிருந்தன.. அதனால் அதனை அகற்றுவதற்காக பாலா என்பவர் தொட்டிக்குள் இறங்கினார்... பாலாவுக்கு வயது 37... அப்போது கழிவுநீர் தொட்டியின் அடியில் இருந்து விஷவாயு பாலாவை தாக்கியது.. அந்த விஷவாயு வீரியத்தினால், பாலாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அந்த தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.

ஊதினார்
இதனை பார்த்த அங்கிருந்தோர் எல்லோரும் அலறி பதறினர்... உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது... வீரர்களின் விரைந்து வந்தனர்.. கையில் பாதுகாப்பு கவசங்களுடன் வந்த அவர்கள், உடனடியாக தொட்டிக்குள் இறங்கி பாலாவை வெளியே மேலே தூக்கி கொண்டு வந்தனர்.. அதில் ஒரு வீரர், மயங்கிய நிலையில் கிடந்த பாலாவின் வாயில் வாய் வைத்து ஊதினார்.

மூச்சு காற்று
தன் மூச்சு காற்றினை அவருக்கு செலுத்தி சுவாசம் தர முயன்றார்.. ஆனாலும் பாலா துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டிக்குள் தொழிலாளிகளை இறக்கிய விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாராட்டு
உயிரிழந்த, பாலா உடம்பெல்லாம் கழிவுநீர் இருந்தாலும், எதை பற்றியும் யோசிக்காமல் சட்டென அவர் வாயில் வைத்து ஊதி, உயிர் கொடுக்க முனைந்த அந்த தீயணைப்பு வீரருக்குதான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது... எப்படியாவது ஒரு உயிர் பிழைத்துவிடாதா என்று அந்த வீரரின் தவிப்பு பொதுமக்களை சிலிர்க்க வைத்து வருகிறது!!
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications