Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை நீலாங்கரையில் அரசிடமே 16 கோடி சம்பாத்தியம்.. ஒரே ஆவணத்தில் மாறிய வாழ்க்கை.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக அரசு நெடுஞ்சாலை துறை நிலத்தை கையகப்படுத்தியது. இதில் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த நடராஜன் என்பவர் 1,050 சதுர மீட்டர் நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று உரிய ஆவணங்களையும் கொடுத்து ரூ.16 கோடியை இழப்பீட்டு தொகை பெற்றுள்ளார். ஆனால் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.. அவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 9.2 கி.மீ. நீளச் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நிலம் கையகப்படுத்துதல் முடிந்த பின்னரே, அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் வேகமெடுத்தது. இப்போது சாலை விரிவாக்க பணிகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன.

Chennai Man earning Rs 16 crore by selling land to the govt using fake documents in Neelankarai

இதனிடையே சென்னை நீலாங்கரை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக அரசு நெடுஞ்சாலை துறை நிலத்தை கையகப்படுத்திய போது நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து இழப்பீடு பெற்றதாக புகார் எழுந்தது. சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த 55 வயதாகும் நடராஜன் என்பவர் 1,050 சதுர மீட்டர் நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று உரிய ஆவணங்களையும் கொடுத்து ரூ.16 கோடியை இழப்பீட்டு தொகையாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 38 வயதாகும் சிவ கணேசன் என்பவர் ஆர்.எம்.சி. டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறுகையில், சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த 55 வயதாகும் நடராஜன் என்பவர் தன்னுடைய நிலம் என்று போலியான ஆவணங்களை காட்டி நெடுஞ்சாலை துறையிடம் ரூ.16 கோடியை பெற்று முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளார் என்றும், ஆனால் உண்மையில் ஆர்.எம்.சி. டிரேடர்ஸ் என்ற கம்பெனிக்கு அந்த நிலம் சொந்தமானது என்று கூறியிருந்தார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் அந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நடராஜன் போலி ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நிலத்தை தன்னுடைய நிலம் என்று கூறி நெடுஞ்சாலை துறையிடம் ரூ.16 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் அரசு நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் என ஏமாற்றி, மத்திய அரசிடமே 200 கோடி வரை சிலர் மோசடி செய்திருந்தார்கள். அவர்களை அண்மையில் தான் போலீசார் கைது செய்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது சென்னை நீலாங்கரையிலும் தனியார் நிலத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+