சென்னை நபருக்கு லாட்டரியில் அடித்த எதிர்பாராத யோகம்! துபாயில் கொட்டிய பணமழை!
சென்னை: துபாயில் வசித்து வரும் சென்னையை சேர்ந்த சக்தி விநாயகம் என்பவருக்கு லாட்டரியில் பணமழை கொட்டியுள்ளது. யுஏஇ லாட்டரியில் பிக் டிக்கெட் வாங்கிய இவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதேபோன்று கேரளாவை சேர்ந்த டிரைவருக்கும் துபாய் லாட்டரியில் ரூ.24.5 லட்சம் பரிசாக அடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். கட்டிட வேலைகள், டிரைவர்கள் என பல்வேறு வேலைகளுக்காக இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரபு நாடுகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது.

லாட்டரி டிக்கெட் விற்பனை
குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் அரபு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் லாட்டரிகளுக்கு அனுமதி இருக்கிறது. இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது. தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது. லாட்டரியால் ஏழை குடும்பங்கள் நிதி இழப்புக்கு ஆளானதால், தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள டிரைவருக்கு லாட்டரியில் பரிசு
எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் சிலருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருக்கிறது. வேலைக்கு போன இடமாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனாலும் ஒரு சிலருக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டக் காற்றும் வீசி விடுகிறது.
அந்த வகையில்தான், துபாயில் டிரைவராக பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்தவரான பஷீர் கைபுரத் என்பவருக்கு 1 லட்சம் திர்ஹாம் லாட்டரியில் பரிசாக அடித்துள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக இதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த பஷீர், பிக் டிக்கெட் குலுக்கலில் பங்கேற்றார். அவர் வாங்கிய 276640 என்ற டிக்கெட் எண்ணுக்கு பரிசு அடித்துள்ளது.
20 வருஷமாக லாட்டரி வாங்குகிறேன்
கடந்த இரண்டு வருடங்களாக லாட்டரி வாங்கி வரும் பஷீருக்கு இதுவரை பரிசு அடித்தது இல்லையாம். ஆனாலும் எப்படியாவது ஒருநாள் நமக்கான அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற ஆசையில் டிக்கெட்டு வாங்கி வந்துள்ளார். கடைசியில் அவரது நம்பிக்கை வீண் போகாமல், ஒருவழியாக லட்சாதிபதி ஆகியுள்ளார்.
இது தொடர்பாக பஷீர் கூறுகையில், "லாட்டரியில் பரிசு அடித்து இருப்பதாக எனக்கு முதலில் தொலைபேசியில் அழைப்பு வந்தது. முதலில் இது உண்மையான அழைப்புதானா என நான் நினைத்தேன். பரிசாக அடித்துள்ள இந்த தொகையை வைத்து கேரளாவில் உள்ள எனது குடும்பத்திற்கு உதவி செய்ய போகிறேன். லாட்டரியில் பரிசு அடித்தாலும் தொடர்ந்து லாட்டரி வாங்க திட்டமிட்டு இருக்கிறேன்."
சென்னை நபருக்கு லாட்டரியில் பரிசு
இதேபோன்று துபாய் லாட்டரியில் சென்னையை சேர்ந்த சக்தி விநாயகம் என்பவருக்கும் லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. துபாயில் 20 ஆண்டுகளாகத் தங்குமிட பொறுப்பாளராகப் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகனுக்கு யுஏஇ பிக் லாட்டரியில் பரிசு அடித்துள்ளது.
சக்தி விநாயகன் கடந்த 5 ஆண்டுகளால ஆண்டுகளாக பிக் டிக்கெட் சீட்டுகளை வாங்கி வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு மில்லியன் திர்ஹாம் லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. பரிசு விழுந்திருப்பதாக தகவல் அறிந்ததும் ஒரு நிமிடம் அப்படியே திகைத்துவிட்டதாக கூறிய சக்தி விநாயகன், லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிசுப் பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை" என்று கூறினார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
Kerala lottery: கேரள லாட்டரியில் 30 லட்சம் பரிசு.. மறந்துபோன உரிமையாளர்! கேரள வியாபாரி செய்த காரியம்! என்ன மனுஷன்யா! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications