சென்னையில் மகன் வாங்கிய சொந்த வீடு.. முதல் முறை போன பெற்றோரின் ரியாக்சன்.. டிரெண்ட்டிங் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை சேர்ந்த ஒருவர் சொந்தமாக வீடு வாங்கி தனது பெற்றோரை அழைத்து சென்ற வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் புதிய வீட்டை பார்த்து அவரது பெற்றோர் நெகிழ்ந்து போயினர். வீட்டின் சுவர் உள்பட ஒவ்வொரு பகுதியையும் அவர்கள் பிரமிப்போடு பார்த்து அந்த தம்பதி கொடுத்த ரியாக்சன் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளதோடு, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‛‛எலி வளையானாலும் தனி வளை வேண்டும்'' என்பது பழமொழி. கொஞ்சம் இடம் இருந்தாலும் அது நமக்கு சொந்தமாக இருக்க வேண்டும். அதுபோல் தான் சொந்த வீடு. ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவாக உள்ளது.

chennai house own house

இது ஒரு தரப்பினருக்கு எளிதாக கிடைத்து விடும். ஆனால் மற்றொரு தரப்புக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் பிறந்தோருக்கு எப்படியாவது சொந்த வீடு கட்டி அல்லது வாங்கி அதில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் வாழ்நாள் கனவாகவே இருக்கும்.

டிரெண்டாகும் வீடியோ

அதேவேளையில் சிலர் சரியான திட்டமிடலுடன் சில ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து தங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கி கொள்கின்றனர். அப்படி சென்னையில் சொந்த வீடு கனவை நனவாக்கிய ஒருவர் தனது பெற்றோரை முதல் முதலாக வீட்டுக்குள் அழைத்து சென்றதும், அப்போது வீட்டை பார்த்து அவரது பெற்றோர் கொடுத்த ரியாக்சனும் தான் தற்போது இணையதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.

சென்னையை சேர்ந்தவரின் பதிவு

அதாவது, சென்னையில் வசித்து வருபவர் கிருபாகரன் ராஜேந்திரன். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‛‛என் பெற்றோர் முதன்முறையாக வீட்டை பார்த்தபோது கிடைத்த இந்த தருணம் விலைமதிப்பற்றது.

எந்த வகையான சொத்து அல்லது மியூட்சுவல் பண்ட்டும் இத்தகைய மகிழ்ச்சியை தராது. வீடு வாங்குவது ஒரு உணர்வுபூர்வமான முடிவு. அதனை நான் எனது சொந்த வருமானத்தை பயன்படுத்தியே வாங்கி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

54 வினாடி வீடியோ

மேலும் அந்த பதிவில் அவர் 54 வினாடிக்கான வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். அந்த வீடியோ தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. வீடியோவில் கிருபாகரன் ராஜேந்திரனின் பெற்றோர் வீட்டுக்குள் நுழைகின்றனர்.

வீட்டு வாசலில் இருந்து உள்ளே நுழைந்த தந்தை வீட்டைபார்த்ததுமே பிரமித்துப்போகிறார். வீட்டை பார்த்து அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பின்னால் அவரது மனைவி நுழைய அவரும் வீட்டை பிரமிப்போடு ரசிக்கிறார்.

கட்டியணைத்து மகிழ்ச்சி

அவர்கள் இருவரின் பார்வையுமே சொந்த வீடு நனவாதன் ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி உள்பட பல உணர்வுகளை சொல்கிறது. இந்த பிரமிப்பு அவர்களின் கண்களில் தெரிகிறது. என் மகன் சொந்த வீடு வாங்கிட்டான் என்ற மகிழ்ச்சி அவர்கள் இருவரின் முகத்தில் தாண்டவமாடுகிறது.

வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் நடந்து செல்லும் அவர்கள் அங்குலம், அங்குலமாக தொட்டு பார்த்து பூரிப்படைகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் 2 பேரும் தனது மகன் கிருபாகரன் ராஜேந்திரனை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

நெட்டிசன்கள் கமெண்ட்

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக தொடங்கி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், ‛‛நான் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தேன். உங்கள் பெற்றோரின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி என்னை நெகிழ செய்தது. எதிர்காலத்தில் பெரியளவில் வளர்ச்சியடை வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

இன்னொருவரோ, ‛‛வாழ்த்துகள்.. உங்கள் பெற்றோரின் முகபாவணைகள் விலை மதிப்பற்றவை. இத்தகை தருணங்கள் அரிதானவை'' என்று கூறி வருகின்றனர். மேலும் இன்னும் சிலரோ தங்களின் முதல் வீடு கனவு நனவானபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ, இதுபோன்று விரைவில் சொந்த வீடு வாங்கி எனது குடும்பத்தை அழைத்து செல்ல வேண்டும். இந்த வீடியோ மகிழ்ச்சியோடு கூடிய உத்வேகத்தை தருகிறது என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+