சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சென்னை மெரினா.. 6ம் தேதி வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?
சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை சென்னை விமான நிலைய விமான கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6 ஆம் தேதி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படை அணிவகுப்பு நிகச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், விமானப்படை தலைவர், ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் சாகச ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 6 ஆம் தேதி வரை 6 நாட்கள் சென்னை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலைய விமான கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 8 ஆம் தேதி வரை பல்வேறு இடைவெளிகளில் சென்னை விமான நிலைய வான் தடம் மூடப்பட உள்ளது. இன்று பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை விமான நிலைய வான் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2, 3, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல்களுக்கு சென்னை விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications