Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெரினா கடற்கரையில்.. வீடற்றவர்கள் இரவில் தங்க காப்பகம்! அசத்திய மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிச்சை எடுப்பவர்கள், ஆதரவு இல்லாத முதியவர்கள் என வீடு இல்லாத பலரும் இரவு நேரங்களில் சென்னை மெரினா கடற்கரையில் தங்கி வரும் நிலையில் அவர்களுக்காக இரவு நேர காப்பகத்தினை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. ரூ.86,20,000- செலவில் இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும் எனவும், தங்குபவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

உலகின் 2-வது மிகப்பெரிய கடற்கரையாக சென்னை மெரினா உள்ளது. சென்னையில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலமாகவும் மெரினா கடற்கரை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் மெரினாவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.

Chennai Marina Beach Corporation

சென்னை மெரினா கடற்கரை

அந்த அளவுக்கு எப்போதும் பரபரப்பாக மெரினா கடற்கரை காணப்படும். வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் கூட மறக்காமல் சென்னை மெரினா பீச்சை பார்த்துவிட்டு செல்வார்கள். மெரினா கடற்கரையில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடல் அலையை முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் சிரமம் இன்றி பார்க்க ஏதுவாக, புதிய நடைபாதை மற்றும் பலூன் சக்கர நாற்காலிகளை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க.. மெரினா கடற்கரை மற்றும் உட்புற சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இரவில் தங்குவதை பார்க்க முடிகிறது.

இரவு நேர காப்பகம்

பிச்சை எடுப்பவர்கள், ஆதரவு இல்லாத முதியவர்கள் என வீடு இல்லாத பலரும் இரவு நேரங்களில் இங்கு தங்குகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகம் அமைக்க முடிவு மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, அண்ணா சதுக்கம் அருகே 2,400 சதுர அடியில் இரவு நேர காப்பகத்தை மாநகராட்சி கட்டியுள்ளது.

எப்போது பயன்பாட்டுக்கு திறக்கப்படும்?

ரூ.86,20,000- செலவில் இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடந்து வரும் நிலையில், இப்பணிகள் விரைவில் முடிந்து இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருக்கிறது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும் எனவும், தங்குபவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.

அம்மா உணவகம்

டாய்லெட் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக காப்பக பராமரிப்பு பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் தங்குபவர்களுக்கு அம்மா உணவகம் வாயிலாக உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+