சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023ஐ விட மோசமான நிலைமை!
சென்னை: தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்பஅலை வீசி வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள 5 ஏரிகளில் தண்ணீர் தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏரிகளில் இருந்த இருப்பை விட தற்போது தண்ணீர் அளவு சரிந்துள்ளதால் சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை நோக்கி செல்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெப்பஅலை வீசி வருகிறது. இன்னும் மே மாதம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அடுத்த மாதத்தை எப்படி சமாளிப்பது என்று மக்கள் புலம்ப தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் இறுதியில் சென்னையில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. அதேவேளையில் சென்னையில் உள்ள ஏரிகள் முழுவதுமாக நிரம்பின.
அதேபோல் டிசம்பர் பாதியில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் குளம், கண்மாய்கள் நிரம்பின. இதனால் கோடையில் தண்ணீர் பிரச்சனை வராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி மாதம் அடிக்க தொடங்கிய வெயிலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளம் கண்மாய்களில் இருந்த தண்ணீர் விரைவாக ஆவியாகி வருகிறது.
இந்நிலையில் தான் கடும் வெப்பம் காரணமாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள 5 ஏரிகளில் தண்ணீர் ஆவியாகி வருகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை (நீர்த்தேக்கம்) ஏரிகளில் தண்ணீர் குறைந்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருந்த தண்ணீர் இருப்பை ஒப்பிடும்போது புழல் ஏரியை தவிர தற்போது பிற ஏரிகளில் தண்ணீர் இருப்பு சரிந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த 5 ஏரிகளிலும் 8.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 7.1 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது. இது கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 1.4 டிஎம்சி குறைவாகும்.
அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி புழல் ஏரியில் 2418 மில்லியன் கியூபிக் அடி தண்ணீர் இருந்தது. தற்போது கடந்த ஆண்டை விட கூடுதலாக தண்ணீர் உள்ளது. அதன்படி புழல் ஏரியில் 2849 மில்லியன் கியூபிக் அடி உள்ளது. மாறாக செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டை விட தண்ணீர் குறைந்துள்ளது.
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 2835 மில்லியன் கியூபிக் அடியாக இருந்த தண்ணீர் இந்த ஆண்டு 2436 மில்லியன் கியூபிக் அடியாக குறைந்துள்ளது. சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு 794 மில்லியன் கியூபிக் அடியாக இருந்த தண்ணீர் தற்போது வெறும் 173 மில்லியன் கியூபிக் அடியாக இருக்கிறது.
அதேபோல் பூண்டி ஏரியில் கடந்த ஆண்டு 1266 மில்லியன் கியூபிக் அடியாக இருந்த தண்ணீரின் அளவு இப்போது 1130மில்லியன் கியூபிக் அடியாகவும் சரிந்துள்ளது. மேலும், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு 475 மில்லியன் கியூபிக் அடியாக இருந்த தண்ணீரின் இருப்பு 392 மில்லியன் கியூபிக் அடியாக குறைந்திருக்கிறது.
இதுதவிர சென்னைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் வீராணம் ஏரி முற்றிலுமாக வறண்டுப்போய் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீராணம் ஏரியில் 605.40 மில்லியன் கியூபிக் அடி நீர் இருந்தது. இப்படி ஏரிகளில் தண்ணீர் குறைந்து இருப்பது என்பது சென்னைக்கு வந்த எச்சரிக்கை மணியாகும். ஏனென்றால் ஏப்ரல் மாதம் போல் மே மாதமும் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் நிச்சயம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications