சென்னையில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும்.. இனி மழைநீர் தேங்காது! மேயர் கொடுத்த முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு பருவமழையின்போதும் சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சனை பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது. இந்நிலையில், இனி சென்னையில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும், மழைநீர் தேங்காது என மாநகராட்சி மேயர் பிரியா கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சியை வீக்கமாக மாற்றியிருக்கிறது. எனவே கழிவுநீர், மழைநீர் மேலாண்மை சவாலானதாக மாறியுள்ளது.

rain Chennai mayor

இருப்பினும் புதிய திட்டங்கள் மூலம் சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால் பணிகளை சீரமைத்து வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சில பணிகளை மாநகராட்சி வேகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தண்டையார்பேட்டை போன்ற வடசென்னை பகுதிகளில் வடிகால் பணிகளை தீவிரமாக மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட 45,71 வார்ட்டில் கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் புதிய மேம்பாலம் ரூ.226.55 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல தண்டையார்பேட்டை பகுதியல் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகள், குளம் தூர் வாரும் பணிகள், மழைநீர் வடிகால் விரிவாக்க பணிகளையும் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தி.நகர் சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல கணேசபுரம் பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முடிக்கப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மண்டலம் 4 மற்றும் 46 ஆகிய வார்டுகளில் ரயில்வே இடத்தில் உள்ள 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் மழை நீர் தேங்கும் பிரச்சினை இருக்காது. மட்டுமல்லாது குளத்தை ஒட்டி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது. மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தண்ணீரை வெளியேற்றும் வகையில் மின் மோட்டார்கள் ரெடியாக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல சாலை சீரமைப்பு பணிகள் மழை காலத்துக்கு பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மழைநீர் வடிகால்கள் பெரிய கால்வாய்களில் தூர்வாரும் பணி இயந்திரம் மற்றும் மனித வளத்தை பயன்படுத்தி நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் அதை தாங்கும் வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி 24 மணி நேரத்தில் தண்ணீர் வடியும்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+