தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு.. "1913" நம்பரை பெண்கள் நோட் பண்ணுங்க.. மேயர் பிரியா ராஜன் சபாஷ்
சென்னை: சென்னை மேயர் முன்னெடுத்துள்ள, விழிப்புணர்வு நடவடிக்கையானது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. குறிப்பாக, பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வருடம், "நம்பியோ" NUMBEO என்ற தனியார் நிறுவனம் உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.. பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.

சென்னை: அதில், பாதுகாப்பான நகரங்களில் உலகளவில், சென்னை 208வது இடத்தை பிடித்திருந்தது.. அதாவது, இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருந்தது சென்னை. இது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் 3,000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலானவர்கள் சென்னை மாநகரம் தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புது முயற்சி: ஆனால், 62 சதவீதம் பொது இடங்களில் பாலியல் தொல்லைகள் நடந்தால், யாரும் தட்டி கேட்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்... அதனால்தான், இதனை மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி தற்போது புது முயற்சியை எடுத்துள்ளது.. இதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், "தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு" என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க., பூங்காவில், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த, "தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை, மேயர் பிரியா துவக்கி வைத்திருக்கிறார்.
மேயர் பிரியா: அப்போது மேயர் பேசும்போது, "ஒரு பெண் காலை 10 மணியாக இருந்தாலும் சரி, இரவு 10 மணியாக இருந்தாலும் சரி, சென்னை மாநகரத்தில் அந்த பெண் பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டும். அப்படி பாதுகாப்பாக உணர, பொதுமக்களின் பொறுப்பும் உள்ளது... பொது இடங்களில் பாலியல் தொல்லைகள் நடந்தால், அவற்றை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது.
பெண்களின் பாகுபாடு களைய மற்றும் பாதுகாப்புக்கு வீடுகளில் இருந்தே மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரு வீட்டில் ஆண், பெண் குழந்தைகள் இருந்தால், பெண் குழந்தை இப்படித்தான் அமர வேண்டும், இப்படி தான் உடை அணிய வேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும்... அப்போது தான், பாலின வேறுபாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

மாற்று திறனாளிகள்: பொது இடங்களில் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானால் பொதுமக்களும் உடனடியாக அதனை தட்டி கேட்க வேண்டும்.. பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையை தவிர்ப்பதற்காகன விழிப்புணர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..
ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் உதவி கோரலாம். .. இந்த நம்பர் அனைத்து பகுதியிலும் அறிவிப்பு பலகைகளில் பொறிக்கப்படும்.. உதவி எண்களை இயக்க கூடுதலாக 50 பணியாளர்கள் விரைவில் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.. சென்னையை பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான நகரமாக மாற்றுவதே எங்களின் நோக்கம்.." என்று தெரிவித்துள்ளார் மேயர் ப்ரியா.
காவல் உதவி செயலி: ஏற்கனவே "காவல் உதவி" என்ற செயலியை சென்னை போலீஸார் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. இந்த் ஆப்பை அனைவரும் உடனே டவுன்லோடு செய்து பயன்பெறுமாறும் அறிவுறுத்தியிருந்தனர்.
இதன்மூலம், வேலைக்கு போகும் இளம்பெண்கள் இந்த ஆப் மூலம் உதவி கோரி தங்கள் பாதுகாப்பை இரவிலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.. தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்து இளம் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை அவர்கள் கண்காணிக்கும்படியான வசதிகளையும் இந்த ஆப் மூலம் போலீஸார் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்..
அத்துடன், 100, 101, 112 என பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவி எண்களையும் இந்த ஆப் மூலமாகவே அழைத்து உதவி கோர முடியும் என்பது நினைவுகூரத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications