தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லைங்க! ஆள விடுங்க! நைஸாக நழுவிய சென்னை மேயர் ப்ரியா ராஜன்!
சென்னை: தக்காளி விலை உயர்வு குறித்து சென்னை மேயர் ப்ரியா ராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லைங்க எனக் கூறிவிட்டு நைஸாக நழுவிக்கொண்டார் சென்னை மேயர் ப்ரியா ராஜன்.
சென்னை மாநகராட்சி பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை இன்று கல்விச் சுற்றுலா அனுப்பி வைத்த மேயர் ப்ரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது மாமன்னன் திரைப்படம் பார்த்துவிட்டீர்களா, படம் எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உற்சாகமாக பதிலளித்த சென்னை மேயர் ப்ரியா ராஜன், மாமன்னன் திரைப்படத்தை தாம் பார்த்துவிட்டதாகவும் படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் சமூக நீதியை நிலை நாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் இருக்கிறது என்பதை ''உதய் அண்ணன்'' காட்டியிருக்கிறார் எனவும் பேசினார். அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், தக்காளி விலை உயர்ந்துகொண்டே போகிறதே அதை குறைந்த விலையில் கொடுப்பதற்கு மாநகராட்சி சார்பில் ஏதேனும் திட்டம் உள்ளதா என வினவினார்.
தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லைங்க என சிரித்துக்கொண்டே பதிலளித்த மேயர் ப்ரியா ராஜன், ஆள விடுங்க எனக் கூறிவிட்டு எஸ்கேப் ஆகப் பார்த்தார். இருங்க இருங்க என மேயரிடம் கூறிய அந்த நிருபர் மாமன்னன் படம் பற்றி மட்டும் பேசுகிறீர்களே எனக் கேட்டதுடன் அந்தப் படம் உங்க டிபார்ட்மெண்டில் வருகிறதா என்பதை கேட்காமல் கேட்டார்.
இதற்கு என்ன பதிலளிப்பது என்றே தெரியாமல் சிரித்த மேயர் ப்ரியா ராஜன் தனது பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். முன்னதாக மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications