என்ன ஒரு மரியாதை! அமைச்சர் சேகர்பாபுவை கண்டதும் எழுந்து நின்ற சென்னை மேயர்! அரசு விழாவில் ருசிகரம்!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் சேகர் பாபு மேடையேறி வருவதை கண்ட மேயர் பிரியா ராஜன் சட்டென எழுந்து நின்று கொண்டார்.
இதனிடையே மேடையில் முதல்வர் இருப்பதால் சுதாரித்துக்கொண்ட மேயர் ப்ரியா ராஜன், அமைச்சர் சேகர்பாபு அமர்வதற்கு முன்பே தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
மேயர்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் 'வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே' என அந்தப் பதவிக்குரிய மரியாதையை முழுமையாக வழங்குவார்.

அரசு விழா
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவானது சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் அம்ர்ந்திருக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்.

சென்னை மேயர்
அப்போது மேடைக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை பார்த்ததும் சென்னை மேயர் ப்ரியா ராஜன் சட்டென எழுந்து நின்று கொண்டார். மேடையில் முதல்வர் இருப்பதால் இது போல் செய்யக்கூடாது என்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட அவர், அமைச்சர் சேகர்பாபு அமர்வதற்கு முன்பே தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அமைச்சர் சேகர்பாபு மீதான தனது விசுவாசத்தையும், மரியாதையையும் அரசு விழாவில் வெளிப்படுத்தும் விதமாக நடந்துள்ளார் மேயர் ப்ரியா ராஜன்.

கட்சி நிகழ்ச்சிகள்
பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தான் இது போன்ற நிகழ்வுகளை பார்க்க முடியும். அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மேயராக இருப்பவர்கள் தங்களது பதவிக்குரிய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பது தான் வழக்கம். மேயர்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் எப்போது எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் 'வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே' எனக் குறிப்பிடுவதுடன் அந்தப் பதவிக்குரிய மரியாதையை முழுமையாக வழங்குவார். ஏனெனில் அவரும் மேயராக இருந்த காரணத்தால் அந்தப் பதவிக்குரிய அதிகாரமும், கம்பீரமும் அவருக்கு தெரியும்.
Recommended Video

துணை மேயர்
விழா மேடையில் முதல்வருடன் மூன்று அமைச்சர்கள், மேயர், தலைமைச் செயலாளர் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்தனர். துணை மேயர் மகேஷ் உட்பட இன்னும் பல முக்கியப் பிரமுகர்கள் மேடைக்கு கீழே தான் அமர்ந்திருந்தனர். அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications