பாஜக உமா ஆனந்தன் எழுப்பிய ஒற்றை கேள்வி.. கொதித்த திமுக கவுன்சிலர்கள்.. மேயர் பிரியா தந்த பதிலடி
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பிரெஞ்சு மொழி சொல்லி கொடுக்கும் போது, ஹிந்தி சொல்லிக் கொடுக்காதது ஏன் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இன்று கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். மேலும் மாநகராட்சி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு மாநகராட்சி மேயர் பிரியா உடனடியாக பதில் அளித்தார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தொடர் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இன்றைய கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசும் போது, தனது வார்டுகளில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறார், சில நாடுகளைத் தவிர பிரெஞ்சு மொழி பேசுவதில்லை . நாட்டின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் உதவும் என்பதால் சென்னை மாநகராட்சி ஏன் ஹிந்தியைக் கற்பிக்க முடியாது என்றும் கேட்டார். மேலும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழியில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார், ஏனெனில், மாணவர்களால் சரியான உச்சரிப்புடன் படிக்க முடியவில்லை என்று அதற்கான காரணத்தை உமா ஆனந்தன் கூறினார்.
பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனின் இந்த பேச்சு திமுக கவுன்சிலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயர்பிரியா ராஜன் பதில் அளித்து பேசுகையில், ஸ்கில் டெவலப்மெண்ட் முக்கியம், தமிழ் முக்கியம், ஆங்கிலம் முக்கியம், பிரெஞ்சு மொழியை கூடுதலாக கற்பிக்கிறோம். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறோம். பிரெஞ்சு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் மாணவர்களிடம் திணிக்கவில்லை.. எந்த குழந்தைகள் விருப்படுகிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் கற்றுத்தருகிறோம்.

ஆங்கிலத்தை பொறுத்தவரை தினமும் பள்ளி ஃபிரேயரில் நாங்கள் ஆங்கில வார்த்தை அர்த்தத்துடன் தினமும் சொல்லிக்கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். அந்த வார்த்தையை வைத்து ஒரு புதிய வரிகளையும் உருவாக்கி தர சொல்லியிருக்கிறோம். அதுபடி நடக்கிறது. அதேபோல் பள்ளி வகுப்பறையில் தினமும் ஆங்கில நியூஸ் பேப்பரை கொடுத்து உச்சரிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிவற்றை செய்து வருகிறோம். அதேபோல் ஆங்கில வகுப்பின் போது, 10 நிமிடம் ஒவ்வொரு குழந்தையையும் ஆங்கிலத்தில் உரையாட வைக்கிறோம். இவை எல்லாம் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட உமா ஆனந்தன், ஆனாலும் அதுபோதுமானதாக இல்லை.. அதை சிலபஸ் ஆகவும், சப்ஜெக்டாகவும் எடுக்க வேண்டும்.. உயர்கல்விக்கு செல்ல மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் படிப்பதை நான் கேட்ட போது உச்சரிப்பு, சரியாக இல்லை என்றார்.

இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், மழலையர் பள்ளி முதலே மாணவர்களுக்கு தேவையான திறன் மேம்பாடு பயிற்சியும், ஆங்கிலத்தில் பேசுவது தொடர்பாக சரியான உச்சரிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது . ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் சொல்லித்தரப்படுகிறது. உச்சரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடும். ரஷ்யாவில் உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும். அமெரிக்காவில் உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும். இந்தியாவில் ஒரு மாதிரி இருக்கும்.. நாம் அமெரிக்காவில் உள்ளது போல் இங்லீஸ் பேச வேண்டும் என்று முயற்சிக்க முடியாது. அதேபோல் ஆங்கிலத்தில் நாம் பேசுவது அவர்களுக்கு புரிகிறதா, அதை நம்மிடம் திரும்பவும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார்களா.. என்பதை உறுதி செய்யும் தரமான கல்வியை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.. நம் நாட்டில் ஒரு உச்சரிப்பு உள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் ஆங்கில மொழி உச்சரிப்புகளில் மாணவர்களை பேச வைக்க முடியாது" என்று மேயர் பதிலளித்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications