சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து பலி.. பயங்கர ஷாக்! காரணம்? ஒரே மர்மம்!
சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் (24) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (24). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனுஷ் ஸ்டான்லி குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைப் பார்த்த சக மாணவர்கள் தனுஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனுஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற ஏழுகிணறு காவல் நிலைய போலீசார் மாணவன் தனுஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications