நங்கூரம்போட்ட “பூதம்”.. கடலுக்கு நடுவே மீனவர்களுக்கு அச்சுறுத்தல்! மீன்பிடிக்க போயிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூறாவளிக் காற்று கடலுக்கு நடுவே வீசி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து குறிப்பிட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Chennai Met Department has advised fishermen not to go fishing due to hurricane

01.01.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02.01.2024 மற்றும் 03.01.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01.01.2024: தெற்கு அரபிக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்." என்று தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஊத்து (திருநெல்வேலி) 22, நாலுமுக்கு (திருநெல்வேலி) 21, காக்காச்சி (திருநெல்வேலி) 20, மாஞ்சோலை (திருநெல்வேலி) 10, பாபநாசம் (திருநெல்வேலி) 3, புலிப்பட்டி (மதுரை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), பெரியபட்டி (மதுரை) தலா 1." என்று குறிப்பிட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+