வடதமிழகம்: 3 நாட்களுக்கு காலை 11.30- 3.30 வரை பொதுவெளியில் வேலை செய்ய கூடாது- வெயில் வதைக்குமாம்!
சென்னை: வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு முற்பகல் 11.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை பொதுவெளியில் பொதுமக்கள் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அக்னி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல நகரங்களில் நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

சென்னை உட்பட வடதமிழக நகரங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் சென்னை உட்பட வட தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எச்சரித்துள்ளது வானிலை மையம்.
அத்துடன் வடதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து காணப்படும்; ஆகையால் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை பொதுமக்கள், விவசாயிகள் பொதுவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.
மேலும் தென்கிழக்கு அரபிக் கடல், கேரளா கடற்பரப்பில் சூறாவளி காற்று வீசும்; மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 48 மணிநேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை மையம்
தமிழகத்தில் நகரங்களில் பதிவான வெப்பநிலை- (ஃபாரன்ஹீட்)
- சென்னை 108 டிகிரி
- திருத்தணியில் 108 டிகிரி
- கடலூர் 107 டிகிரி
- தருமபுரி 101 டிகிரி
- ஈரோடு- 105 டிகிரி
- நாகை 104 டிகிரி
- பாளையங்கோட்டை- 100 டிகிரி
- பரங்கிப்பேட்டை- 105 டிகிரி
- புதுச்சேரி- 106 டிகிரி
- சேலம் -102 டிகிரி
- திருப்பத்தூர்- 102 டிகிரி
- திருத்தணி- 108 டிகிரி
- தூத்துக்குடி 100 டிகிரி
- வேலூர்- 107 டிகிரி
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications