தீவிரப் புயலாக மாறும் ஃபனி.. சென்னையில் இன்றிரவு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று மாறியது. இதற்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஃபனி புயலின் திசை மற்றும் செயல்பாடு குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

ஏப்ரல் 30
அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் நேற்றைய தினம் புயலாக மாறியுள்ளது. இது வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வடதமிழகம்- தென் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்.

புயல் திசை
இதனால் வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. அது போல் சென்னையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மே 1-ஆம் தேதிக்கு பிறகு புயல் திசை மாறி வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கும்.

தமிழகத்தில் கரையை
இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ.தூரத்தில் உள்ள புயல் தமிழக கடற்கரையை 300 கி.மீ. வரை நெருங்கும். புயல் வடகிழக்கு பகுதியில் நகர்வதால் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை.

கரை திரும்ப அறிவுரை
இன்று இரவு இந்த ஃபனி தீவிர புயலாக மாறும். அடுத்த 2 நாட்களில் ஃபனி அதி தீவிர புயலாக மாறும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றார் பாலச்சந்திரன்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications