இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையே.. சென்னை வானிலை மைய அறிவிப்பில் வந்த மாற்றம்! என்ன நடந்தது?
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்ட அறிக்கையில் தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க விடமாட்டோம் என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் வானிலை அறிக்கையை மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் வானிலை நிலவரங்களை தினமும் அப்டேட் செய்து வருகிறது. அது போக மழை இருப்பின், 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் உள்ளது. இந்த இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் அன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இதில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையினை படிக்க முடியும். தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பு எதிராக தமிழக அரசு பேசி வரும் நிலையில் வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications