வாவ்.. நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.. அப்போ தமிழகத்துக்கு நல்ல மழை கன்பார்ம்!
Recommended Video

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக் கடலில் பெய்யும் மழையால் தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது.

தமிழகம் நோக்கி
இது கடந்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகர்கிறது.

வானம் மேகமூட்டத்துடன்
இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அறிவுரை
நவம்பர் 14-ஆம் தேதி தமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் செல்ல வேண்டாம்
10-ஆம் தேதி அந்தமான், தென்கிழக்கு கடல் பகுதிக்கும், 11-ஆம் தேதி வங்கக்கடல், வட அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 12-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 13-ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications