சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓ தமிழகத்தில் 9ஆம் தேதி வரை இப்படித்தான் வானிலை இருக்குமா.. சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்

தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 9ஆம் தேதி வரை வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழையும் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மழைப் பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் முடிவடைந்தது. கடந்த நவம்பர் மாதம் 1, 2 என முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழிவு இருந்தது. அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் மாண்டஸ் எனும் புயல் உருவாகி மழையை கொடுத்தது.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் மழை ஆங்காங்கே நின்றுவிட்டது. இதையடுத்து பனிப்பொழிவு நடைபெறுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாது அளவுக்கு பனிப்பொழிகிறது. எனினும் வறண்ட வானிலையே நிலவி வந்தது.

சிசிடிவி காட்சிகள் சொல்வது என்ன?.. வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை சிசிடிவி காட்சிகள் சொல்வது என்ன?.. வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை

குமரிக் கடல்

குமரிக் கடல்

அண்மையில் குமரிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, நகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டதால் மழை மெல்ல மெல்ல குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி வானிலை எப்படி

இனி வானிலை எப்படி

இந்த நிலையில் இனி வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுவை, காரைக்கால்

புதுவை, காரைக்கால்

06.09.2023 முதல் 09.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

English summary
Chennai Meterological department says that from feb 6 to feb 9 there will be dry weather in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X