தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் வார்னிங்
Recommended Video
சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னையில் கனமழை பெய்தது. சிறிது நேரம் கழித்து வெயில் வந்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா குமரிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வடதமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென்தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்யக் கூடும்.
எனவே அக்டோபர் 29, 30, 31 ஆகிய நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications