சென்னை, காஞ்சி உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நல்ல செய்தி சொன்ன சென்னை வானிலை மையம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியவுடன் எப்போது மழை பெய்யும் என மக்கள் ஏங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் நிசார்கா புயல் நாளை உருவாகிறது.
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எங்கு மழை
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

மீனவர்கள்
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுபெற்று புயலாக மாறும். புயலால் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். வரும் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

சூறைக் காற்று
அரபி கடலில் அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் புயல் காற்று வீசும். எனவே ஜூன் 4 ஆம் தேதி வரை லட்சத்தீவு, கேரள கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை முதல் வெயில் விட்டு விட்டு வீசி வருகிறது.
Recommended Video

மழை
சென்னையின் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அது போல் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்கள் மழையை வரவேற்க காத்து கொண்டிருக்கிறார்கள். தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications