பைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க
Recommended Video
சென்னை: வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் மக்கள் தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழை பெய்தால் மட்டுமே பிரச்சினையை ஓரளவு சமாளிக்கலாம் என்ற நிலை எழுந்தது.

நிபுணர்கள்
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 196 நாட்களுக்கு பிறகு, அதாவது 6 மாதங்களுக்கு பிறகு, சென்னையில் மழை பெய்தது. அப்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்ததாக வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் மழை
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையில் மழை இல்லை. நேற்றைய தினம் சென்னையில் பிசுபிசுவென தூரல் போட்டது. ஏதோ தரையெல்லாம் நனையும் அளவுக்கு மழை பெய்தது. எனினும் காஞ்சிபுரத்தில் கனமழை பெய்தது.

பகுதிகள்
இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக நடுவட்டம், தேவாலா ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. அது போல் வால்பாறை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்தது.

இடியுடன் கூடிய மழை
இதுகுறித்து சென்னை வானிலை மையம் செய்தியாளர்களிடம் கூறுகையில் வெப்பசலனம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வானம் மேக மூட்டம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் லேசான மழை உண்டு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications