குஷி..! வரும் நாட்களில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. 'சில்'லாகும் தமிழ்நாடு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருவள்ளூர், வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த சில மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பருவமழை சரியாக பெய்யாமல் இருந்து வந்தது. இதனால் கோடைக் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
ஆனால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள பெரும்பாலான ஏரி மற்றும் குளம் நிரம்பியுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு குறைவே என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை
இந்தச் சூழலில் அடுத்து வரும் சில நாட்களுக்குத் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை
அதேபோல நாளை ( செப். 24 ) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி கனமழையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை ( செப். 25 ) மறுநாள் கடலோர மாவட்டங்களில் கனமழையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் செப் 26ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மேலூரில் 70 மிமி திருபுவனம் புலிப்பட்டி ஆகிய பகுதிகளில் 60 மிமி மழையும் பெய்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
மேலும் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வரும் நாட்களில் ஆந்திர கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications