தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களில் வலுவாக இருந்த நிலையில் அடுத்த இரண்டு தினங்களை பொறுத்தவரையில் குறைவாக பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களில் வலுவாக இருந்தது. ஆனால் அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் முந்தை இரண்டு நாட்களை ஒப்பிடும் போது குறைவாகவே பெய்யும்.

மழை அளவு
கடந்த அக்டோபர் 1 முதல் அக்டோபர் 23ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்த மழையின் அளவு 130 மில்லி மீட்டர். இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 126 மில்லி மீட்டர். இது இயல்பை விட 3 சதவீதம் அதிகம் ஆகும்

காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது.

மழை எப்படி இருக்கும்
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுகிறது. அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து எப்படி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு தெரியவரும்.

டெல்டாவில் கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. அதிபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 9 செ.மீ மழை பதிவானது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ( தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

பாலசந்திரன் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நகரின் சிலப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்" இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications