இந்த 2 மாவட்டத்தில் உறை பனி.. பொங்கல் லீவுக்கு பின் கிளைமேட் எப்படி இருக்கும்! வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அனைவரும் சொத்து ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனிடையே அவர்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பும் போது வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக். மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் பெரியளவில் மழை இல்லை என்றாலும் அதன் பிறகு மழை சிறப்பாகவே இருந்தது. இந்த வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இந்த வடகிழக்கு பருவமழையில் நல்ல அளவுக்கு மழை இருந்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பியே காணப்படுகிறது.

வானிலை
இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இன்றும் (ஜன. 15), நாளையும் (ஜன. 16) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

உறை பனி
இந்த இரு நாட்கள் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கும் வாய்ப்புள்ளது. வரும் ஜன.17 முதல் ஜன.19 வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் கணிசமாக மழை பெய்யவில்லை என்றும் அந்த வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களாகவே ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உறை பனி தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. உதகை, அவலாஞ்சி சுற்றுவட்டார உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் இந்த உறைபனி காரணமாக 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் கருகி வருகிறது. இதனால் தேயிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications