ஒரு பக்கம் வெயில்! மறுபக்கம் மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்! எங்கு தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப். மாதம் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு வெப்பம் கணிசமாகக் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் குறைவாகவே இருந்தது.
இதன் காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனிடையே வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

இன்றும் நாளையும் மழை
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (மார்ச் 27) நாளையும் (மார்ச் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்கள்
அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 29) முதல் மார்ச் 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மன்னார்குடி (திருவாரூர்) 8, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7, கோத்தகிரி எஸ்டேட், கொடநாடு தேன்கனிக்கோட்டை, குன்னூர் PTO தலா 5 செமீ மழை பெய்துள்ளது. ஈரோட்டில் 39.2 டிகிரிட செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு மாவட்டத்திலும் வெப்பத்தில் பெரியளவில் மாற்றமில்லை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications