Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றே களம் இறங்கிய காவேரி.. அடையாளமே மாறப்போகுது சென்னை அடையாறு! இப்படித்தான் ரெடியாகுதா சுரங்கம்!

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை உள்ள அடையாறு ஆற்றில் சுங்கரம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி 'காவேரி' இயந்திரம் மூலம் தொடங்கியது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை உள்ள அடையாறு ஆற்றில் சுங்கரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி உள்ளது.

சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்ட்ரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எவ்வளவு கோடி

எவ்வளவு கோடி

மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகள் நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்காக, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.. இதில், 1,242 சதுர மீட்டர் பரப்பளவு கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் வரும் நிலையில், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இதனால்படி, அடையாறு ஆற்றின் அடியில் 666 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க அனுமதி கிடைத்திருந்தது இதேபோல் பக்கிங்காம் கால்வாயை பொறுத்தவரை, தரமணியில் 495 மீட்டர் நீளத்துக்கும் மயிலாப்பூரில் 58.3 மீட்டர் தூரத்துக்கும் சுரங்க ரயில் பாதை அமைக்க அனுமதி கிடைத்திருந்தது.

மாதவரம் சிறுசேரி

மாதவரம் சிறுசேரி

சுரங்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்து இருந்தது. . இப்பணிகளுக்காக சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 23 போரிங் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி வியாழக்கிழமை(பிப்.16) தொடங்கியது. இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு 'காவேரி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) இந்த 3-வது வழித்தடம் மிக முக்கியமான வழித்தடமாகும். இதுதான் சென்னையின் வடக்கு, மத்திய, தென் பகுதிகளை இணைக்கிறது.

அடையாறு ஆறு

அடையாறு ஆறு


அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக, ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. பூமிக்கடியில் முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் கடந்த மாதம் இறுதியில் இறக்கப்பட்டு, தொடர் பரிசோதனை நடத்தப்பட்டது.. இந்நிலையில், பசுமை வழிச் சாலை வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கி உள்ளது.

எப்படி அமைகிறது

எப்படி அமைகிறது

பசுமை வழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டப்படவுள்ளது. இதன் நீளம் 1.26 கிலோ மீட்டர் ஆகும். இந்த பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரம் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து திரு.வி.க பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையாறு சந்திப்பு நிலையத்தை ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு வந்து அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் பசுமை வழிச்சாலையில் இருந்து இயக்கப்படும். அடுத்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு 'அடையாறு' என பெயர் வைத்துள்ளார்கள். இதனிடையே மாதவரம் பால் பண்ணை பகுதியில் முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தும் பணி அக்டோபரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+