சென்னையில் நடக்கும் 500 மீட்டர் மேஜிக்.. குறி வைக்கப்பட்ட 41 இடங்கள்.. மக்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
சென்னை: சென்னைவாசிகளின் அன்றாடப் புலம்பலே இதுதான்... "மெட்ரோல ஏறி சீக்கிரம் வந்துட்டேன், ஆனா ஸ்டேஷனை விட்டு வெளிய வந்தா பஸ்ஸுக்கும் ஆட்டோவுக்கும் அலைஞ்சு உயிர் போகுது!" இந்தத் தலைவலியைத் தீர்க்க அதிரடி பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL).

41 ஸ்டேஷன்கள்... 500 மீட்டர் ஏரியா: ரீ-டிசைன் ஆரம்பம்!
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் என நகரின் மிக முக்கியமான 41 மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை, சர்வதேசத் தரத்திலான 'மல்டிமோடல் ஹப்களாக' (Integrated Multimodal Hubs) மாற்றப்போகிறது மெட்ரோ நிர்வாகம். இதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஸ்டேஷனைச் சுற்றியும் 500 மீட்டர் சுற்றளவுக்குப் பல அதிரடி மாற்றங்கள் வரப்போகின்றன:
தடையற்ற நடைபாதைகள்: ஸ்டேஷனில் இருந்து இறங்கியதும் நிழல் தரும் கூரைகளுடன் கூடிய தொடர்ச்சியான பிளாட்பாரங்கள்.
ஸ்கைவாக் எக்ஸ்டென்ஷன்: கிண்டி போன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் அண்ணா சாலை, மின்சார ரயில் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதைகள் விரிவுபடுத்தப்படும்.
பஸ் ஸ்டாப் மாற்றம்: பேருந்துக்காக ரோட்டில் ஓடத் தேவையில்லை. மெட்ரோ வாசலுக்கே பஸ் நிறுத்தங்கள் கொண்டு வரப்படும்.
பிக்-அப் & டிராப் ஜோன்: ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஃபீடர் சர்வீஸ்களுக்கு எனத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு, பார்க்கிங் முறைப்படுத்தப்படும்.
"இது முதல் கட்டத்திலேயே வந்திருக்கணும்!" - குமுறும் பயணிகள்
"ராயப்பேட்டையில இருந்து வர்ற எனக்கு, மெட்ரோல இறங்குனதுக்கு அப்புறம் 'லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி' சுத்தமா இல்லை. ஸ்டேஷனை விட்டு வெளிய வந்தா அம்போனு நிக்க வேண்டியிருக்கு," என்கிறார்கள் தினசரி பயணிகள்.
உண்மைதான். மெட்ரோ, மாநகரப் பேருந்து, மின்சார ரயில் என ஒவ்வொன்றும் தனித்தனி தீவுகளாக இருப்பதால் பயணிகள் அவதிப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்துப் பேசிய மெட்ரோ நிர்வாகிகள், , "இந்த ஒருங்கிணைப்புத் திட்டம் முதல் கட்டத்திலேயே (Phase 1) செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததால் தள்ளிப் போய்விட்டது," என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஏன் இந்த மாற்றம் அவசியம்?
வெறும் ரயிலை மட்டும் ஓட்டினால் போதாது, பயணிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஸ்டேஷனை அடைய வேண்டும் என்பதே CMRL-ன் இலக்கு. நடைபாதைகளில் தடைகள் நீக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் 'பேரியர்-ஃப்ரீ' ஆக மாற்றப்படும்போது மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போக ஜப்பானின் கோகுரா ஸ்டேஷன் அல்லது சீனாவின் சோங்கிங் (Chongqing) நகரக் காட்சிகளைப் போல, இனி சென்னையிலும் ஒரு பிரம்மாண்ட அதிசயம் நிகழப்போகிறது. திருமங்கலம் பகுதியில் அமையவிருக்கும் புதிய கமர்ஷியல் காம்ப்ளக்ஸ், இந்தியாவின் முதல் 'பில்டிங்கிற்குள் ரயில் ஓடும்' திட்டமாக உருவெடுக்கிறது.
இதற்கான டெண்டர் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
என்ன ஸ்பெஷல்?
அண்ணா நகர் மேற்கு டெப்போவிற்கு எதிரே, சுமார் 3.85 ஏக்கர் பரப்பளவில் இந்த மெகா புராஜெக்ட் அமையவுள்ளது. இதன் சிறப்பம்சமே, பிரம்மாண்டமான கட்டிடத்தின் 4, 5 மற்றும் 6-வது தளங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் சீறிப்பாயப் போவதுதான்!
கட்டிடத்தின் விவரங்கள் இதோ:
மொத்தம் 4 டவர்கள்: இதில் டவர் A மற்றும் C ஆகியவற்றுடன் ஒன்பது தளங்கள் (9 Floors) கொண்ட பிரம்மாண்ட அலுவலகங்கள் அமையும்.
ரயில் நிலையம் எங்கே?: டவர் B-ல் தான் மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருக்கிறது. தரைதளம் முதல் 9 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் இடைப்பகுதியில் ரயில்கள் வந்து செல்லும்.
பார்க்கிங் வசதி: வாகன நெரிசலைத் தவிர்க்க 3 அடுக்கு நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் (Basement Parking) திட்டமிடப்பட்டுள்ளன.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications