அடி தூள்! பூந்தமல்லி - போரூர் இடையே நாளை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.. இன்னும் கொஞ்ச நாளில் பறக்கலாம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டமான, பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை (ஏப்ரல் 28) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 9.1 கி.மீ தூரம் கொண்ட இந்த தடத்தில் 10 நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைகின்றன. ரூ.63,246 கோடி செலவில் கட்டப்பட்ட இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இறுதியில் ஓட்டுநர் இல்லாத ரயில்களுடன் பயணிகள் நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
2ஆம் கட்ட மெட்ரோ திட்டம்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 9.1 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ரயில் நிலையங்கள்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடத்தில், உயர்மட்ட நடைபாதையில் 10 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையாஞ்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெல்லையகரம் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அமையும்.
இந்த 9.1 கி.மீ பிரிவு இரண்டாம் கட்ட திட்டத்தின் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை போரூர் வழியாக 4வது வழித்தடத்தின் கீழ் வருகிறது, மேலும் இந்த கட்டத்தின் கீழ் திறக்கப்படும் முதல் பாதை இது.
இந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து தொடக்கம்
கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில், பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான முதல் சோதனைப் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. மேல்நிலை உபகரணங்களில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்த சோதனைகள் இந்த 3 கி.மீ நீளப் பாதையில் மிகவும் சீராக நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் சோதனை ஓட்டத்தில், பூந்தமல்லி மற்றும் முல்லைத் தோட்டம் இடையே, ரயில்கள் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த முறை, சராசரி வேகம் மணிக்கு 35 - 40 கி.மீ என்ற அளவில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்படும்.
தற்போது, இரண்டு ரயில்கள் சோதனை ஓட்டங்களுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மற்ற இரண்டும் விரைவில் சோதனை செயல்பாட்டில் சேர்க்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications