களமிறக்கப்பட்ட அதிகாரிகள் டீம்.. சின்ன விஷயத்தை கூட மிஸ் பண்ணாதீங்க.. ஸ்டாலின் தந்த டார்கெட்
சென்னை: பிப்ரவரி 11 முதல் சென்னை மெட்ரோ பாதுகாப்பு ஆய்வு: பூந்தமல்லி - வடபழனி இடையே விரைவில் Metro ரயில் சேவை தொடங்க உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் பொதுமக்களுக்கான ரயில் சேவையைத் தொடங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான மிக முக்கியமான 'மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர்' (CMRS) தலைமையிலான பாதுகாப்பு ஆய்வு பிப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.

Metro பயணிகளின் பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வு
முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இந்த ரூட்டை திறக்க உத்தரவிட்டு உள்ளதால் பணிகள் வேகம் எடுத்து உள்ளன. இந்த மூன்று நாள் ஆய்வின் போது, பாதுகாப்பு ஆணையர் குழுவினர் பின்வரும் முக்கிய அம்சங்களை ஆய்வு செய்வர்:
நிலைய வசதிகள்: நிலையங்களில் உள்ள லிஃப்ட்கள், நகரும் படிக்கட்டுகள் (Escalators) ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் அவசர காலங்களில் லிஃப்ட் பாதியில் நின்றால் பயணிகளை மீட்கும் திட்டம்.
தீ தடுப்பு நடவடிக்கைகள்: தீ விபத்து ஏற்பட்டால் டிக்கெட் பரிசோதனை வாயில்கள் (Ticketing gates) தானாகத் திறக்கின்றனவா என்பதுடன், தீயணைப்பு வழிகள் மற்றும் புகை உணர்விகளின் (Smoke detectors) செயல்பாடுகள்.
தொழில்நுட்ப சோதனைகள்: பிளாட்ஃபார்ம் மற்றும் ரயில்களுக்கு இடையிலான இடைவெளி, தண்டவாளங்களின் தரம், மற்றும் சிக்னல் ஒருங்கிணைப்பு சோதனைகள் விரிவாக நடத்தப்படும்.
ரயில் சேவையின் இடைவெளி மற்றும் வேகம்
மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி:
பூந்தமல்லி - போரூர் இடையே Metro: சுமார் 9 முதல் 10 ரயில்கள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ரயில்கள் ஒவ்வொரு 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
போரூர் - வடபழனி இடையே: ரயில்கள் இயக்கப்படும் கால இடைவெளி சற்று அதிகமாக இருக்கலாம். இது பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.
பயண நேரம்: பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
Metro இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பார்வை
மொத்தம் 118.9 கி.மீ தொலைவு கொண்ட இரண்டாம் கட்டத் திட்டத்தில் மூன்று வழித்தடங்கள் உள்ளன:
மாதவரம் - சிப்காட் (வழித்தடம் 3)
பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் (வழித்தடம் 4)
மாதவரம் - சோழிங்கநல்லூர் (வழித்தடம் 5)
இதில் வழித்தடம் 4-ல் உள்ள பூந்தமல்லி - வடபழனி பகுதிதான் முதலில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பாதுகாப்பு ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆய்வு முடிந்து, பாதுகாப்பு ஆணையர் தரும் சில அறிவுறுத்தல்களைச் செயல்படுத்தியவுடன், ஓரிரு நாட்களில் இறுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன் பிறகு, ஒரு மாதத்திற்குள் இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 118.9 கி.மீ. தூரத்தைக் கொண்ட இரண்டாம் கட்டத் திட்ட ரயில்கள், ஓட்டுநர் இல்லாமல் தானியங்கு முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, முதல் ஆறு மாதங்களுக்கு இவை ஓட்டுநர்களால் இயக்கப்படும். அதன்பிறகு, சில காலத்திற்கு ரயில்களில் நடமாடும் ஊழியர்கள் பயணிகளுடன் இருப்பார்கள். அதன் பின்னரே ரயில்கள் முழுமையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்க அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே குழுவினர் ரயிலை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர். ரயிலின் வடிவமைக்கப்பட்ட வேகம் மணிக்கு 90 கி.மீ. என்றாலும், அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலேயே இயக்க அனுமதிக்கப்படும் என்று ஒரு அதிகாரி கூறினார். அவர் மேலும் கூறுகையில், "மோதல் ஏற்பட்டால் எத்தனை பெட்டிகள் சேதமடையும் என்பதை உருவக வடிவமைப்பு மூலம் பார்த்தனர். அவசர பிரேக்குகளைப் பயன்படுத்தி, ரயில் எவ்வளவு தூரத்தில் நிற்கிறது என்பதையும் சரிபார்த்தனர்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications