சென்னையில் சம்பவம் செய்த "குறிஞ்சி".. சிட்டிக்கு உள்ளே 118.9 கிமீ நீளத்திற்கு நடக்கும்.. செம மாற்றம்
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் குறிஞ்சி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் சார்பாக ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறையை மெட்ரோ தொடங்கி உள்ளது. 15.5 கிமீ தூரத்திற்கு சென்னை விமான நிலையத்தை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் (KCBT) இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது

இந்த ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ உடன் சேர்த்து இரண்டு அடக்கு பாலமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலே உள்ள மட்டத்தில் மெட்ரோ பாதை, முதல் மட்டத்தில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படும். அதாவது முதல் மட்டத்தில் வாகனங்கள் செல்லலாம். இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ செல்லும். கிளாம்பாக்கம் வரை இந்த பாலம் அமைக்கப்படும். ஆனால் ஏற்கனவே பல்லாவரம் பகுதியில் பாலம் இருப்பதால்.. அந்த பாலம் முடிந்த பின்.. சில மீட்டர்கள் கழித்து இந்த இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்படலாம்.
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் II-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும் (5.8 கி.மீ.), 39 உயர்மட்ட மெட்ரோஇரயில் நிலையங்களும் (41.2 கி.மீ) அமைக்கப்படவுள்ளது. 5.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை பிரிவுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.
கட்டம் 2 வழித்தடம் 5-இல் 5.8 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை பிரிவு மற்றும் 2 சாய்வுப்பாதைகள் Tata Projects நிறுவனத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கு JICA நிறுவனம் நிதியுதவி அளிக்கின்றது.
வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை (Upline) 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை 20.02.2025 அன்று தொடங்கி இன்று (21.08.2025) கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது.
சென்னை மெட்ரோ - சுரங்கம் தோண்டும் பணிகள்
சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை (extremely low overburden), 3.8% செங்குத்தான சாய்வு (a steep gradient) மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்டச் சாலையின் (IRR - Inner Ring Road) நடுவில் தரைப் பாதுகாப்புக்கான தேவை போன்றஅனைத்து சவால்களையும் கடந்து பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் திரு.எம்.கார்த்திகேயன், Tata Projects நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.கே.ரமேஷ், திட்ட மேலாளர் திரு. நத்தபோங் கட்கேவ், பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு.இயன் வாட்சன், தலைமை பொறியாளர் திரு.உஸ்மான் ஷெரிப், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Tata Projects நிறுவனம் மற்றும்பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications