பூந்தமல்லி டூ போரூர் ஒருபக்கம்.. ஓஎம்ஆர் டூ மாதவரம் மறுபக்கம்.. சென்னை மெட்ரோ அதிரடி.. வருது மாற்றம்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து வரும் நிலையில், அந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் விமானநிலையம் முதல் விம்கோ நகர் (திருவெற்றியூர்) வரையிலும், பரங்கிமலை முதல் கோயம்பேடு, அண்ணா நகர், சென்ட்ரல் வழியாக விம்கோ நகர் என இரு வழித்தடங்களில் 55 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் ஓடுகிறது. இரண்டாவது கட்டமாக சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும் மெட்ரோ ரயில்கள் பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் நிலையில், சாலைகள் எல்லாம் சேதம் அடைந்துள்ளன. போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகின்றன.
தற்போது பூந்தமல்லி முதல் போரூர் வரை நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ நீளத்துக்கு சாலை போடப்பட்டு, சீரமைப்புப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ. சாலைபோடப்பட்டு, 87 சதவீத சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேபோல, மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ. நீளத்துக்கு சாலை போடப்பட்டு, 65 சதவீத சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.இந்த சாலைகளில் வாகனங்கள் சுலபமாகச் செல்ல முடியும். திருவொற்றியூர், மாதவரம், மற்றும் ஓ.எம்.ஆர். நெடுஞ்சாலைகளிலும் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுவிட்டன.
வடகிழக்குப் பருவ மழையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதேபோன்று, சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் உடனே அந்த சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications