சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய போறீங்களா? முதலில் மறக்காம இதை படிங்க.. இனிப்பான செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோவில் பல முக்கிய மாற்றங்களை செய்வதற்கான ஆலோசனைகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் மெட்ரோவை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.

Chennai metro to revamp its stations and invest more money buy new trains

தற்போது சென்னையில் விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.

இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தினசரி பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ளது. ஒரு காலத்தில் தினசரி பயணம் செய்யும் நபர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் என்று இருந்தது.

தற்போது இதை 7 லட்சம் என்ற அளவிற்கு தினசரி உயர்த்தவும் தமிழ்நாடு அரசு,மெட்ரோ நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

Chennai metro to revamp its stations and invest more money buy new trains

மாற்றங்கள்: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோவில் பல முக்கிய மாற்றங்களை செய்வதற்கான ஆலோசனைகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கூடுதல் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை வாங்குவது பற்றி ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் மெட்ரோ நிலையங்களை மொத்தமாக மாற்றி புதிய வடிவத்தை கொடுக்கவும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) முடிவு செய்துள்ளது.

எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய ₹2,800 கோடி செலவில் ஒரு பெரிய மேம்படுத்தல் திட்டத்தை செயல்படுத்தவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பயணிகள் எண்ணிக்கை உயர்வதை மனதில் வைத்து ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. எதிர்காலத்தை மனதில் வைத்து ரயில்களை அடிக்கடி மாற்றுவது என்று புதிய பல மாற்றங்களை செய்ய தமிழ்நாடு -அரசும் மெட்ரோ நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.

மெட்ரோ பயன்பாடு: மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள மக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. மெட்ரோவில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு மட்டும் இந்த பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

ஆனால் எல்லா நாட்களுக்கும் இல்லாமல் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பயணிக்கக் கூடிய வகையில் இந்த இலவச மற்றும் கட்டண சலுகையிலான டிக்கெட் வழங்கப்படும். உதாரணமாக பண்டிகை நாட்களில் இந்த Promotional tickets வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதற்கு உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விலாசம் மெட்ரோவில் இருந்து 5கிமீ தூரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+