சென்னை மெட்ரோ வேற லெவல்.. ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்.. உலகிலேயே முதல் முறை! அசத்தலான பிளான்!
சென்னை: உலகிலேயே முதல் முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை அமைத்து சென்னை மெட்ரோ புதிய சாதனை படைக்க இருக்கிறது. சென்னை வடபழனி - போரூர் வரை 4 கி.மீ தொலைவுக்கு 4 ரயில்கள் வந்து செல்லும் வகையில் இரட்டை அடுக்கு பாலம் அமைக்கப்படும் நிலையில், ஒன்றில் இருந்து மற்றொரு அடுக்குக்கு தடம் மாறுவதற்காக, ஆர்காடு சாலை பகுதியில் 5வது தண்டவாளமாக லூப் லைன் அமைக்கப்படுகிறது.
சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெருமளவில் உதவி வருகிறது. தற்போது சென்னையில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக சென்னையில் ஒரே தூணில் ஐந்து ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில் ஒரே தூணில் ஐந்து ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச் சாலையில் இருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப்பாதை மூலம் திட்டத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்பதால், குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் வந்து செல்லவும், ரயில்கள் இடமாற்றிக் கொள்ள ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன.
மேலும், இதற்கான ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த எடையைத் தாங்கும் வகையில், 75 மீட்டர் அளவுக்கு பூமியில் புதைக்கப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வழித்தடம் 4 மற்றும் 5 ஆகிய இரண்டும் சந்திக்கும் இடமாகவும் இது அமைக்கப்படுகிறது.. இதில் கீழே இரண்டு தண்டவாளங்கள் 4ஆவது வழித்தடத்திற்காகவும் மேலே 2 தண்டவாளங்கள் 5ஆவது வழித்தடத்திற்காகவும் அமைக்கப்படுகின்றன.
ஒரே தூணில் ஐந்து ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் வந்து செல்லவும் ரயில் இடமாற்றிக் கொள்ள ஒரு லூப்லைனும் சேர்த்து ஐந்து தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக ஒரே தூணில் ஐந்து ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications