மெகா பாறைகள்.. கற்கள்.. களமிறங்கியது டாடாவின் "ராட்சச" மிஷின்.. சென்னை மெட்ரோவில் திக் திக்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 பணிகள் தொடங்கி உள்ளன. இதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள குறிப்பிட்ட பாதையில் மெட்ரோ அமைப்பது மிகவும் கடினம் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், முக்கியமான சில மெட்ரோ நிலையங்களை அமைக்க டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி டாடா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் ரூபாய் 1,204. 87 கோடி வழங்கியுள்ளது. ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ், கெல்லிஸ் உள்ளிட்ட 4 இடங்களில் ரயில் நிலையங்கள் கட்ட டாடா திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இங்கே பூமிக்கு கீழே மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தரையோடு தரையாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் இங்கே அமைக்கப்பட உள்ளன.
மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் உள்ள பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் உள்ளிட்ட நான்கு நிலையங்களுக்கான ஒப்பந்தம் கடந்த வாரம் தினேஷ்சந்திரா-சோமா நிறுவனத்திற்கு ₹1,063.37 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திற்கு அடுத்த கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
முன்னதாக இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
மிகவும் கடினம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 பணிகள் தொடங்கி உள்ளன. இதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள குறிப்பிட்ட பாதையில் மெட்ரோ அமைப்பது மிகவும் கடினம் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் மற்றும் நாதமுனி இடையே நிலத்திற்கு அடியே மெட்ரோ பாதை அமைக்க டாடா ப்ராஜெக்ட்ஸ் மிகக் குறைந்த விலையில் ஏலம் எடுத்துள்ளது. 5.8 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதை முழுக்க மிகப்பெரிய மெகா பாறைகள், கற்கள் மட்டுமே உள்ளன. இதனால் இதை குடைவது மிகவும் கடினம். இந்த பகுதிக்கு டாடாவின் மிஷின்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பாறை மண் காரணமாக இங்கே பணிகளை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும்.
மாதவரம் & சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் உள்ள முக்கியப் பாதையில் சீனிவாச நகர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று மெட்ரோ தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் நடக்கும் மெட்ரோ பணிகள் சென்னையில் செய்யப்பட்ட மெட்ரோ பணிகளில் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.
மற்ற ஒப்பந்தம்: சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (OCC) அமைப்பதற்கான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் கட்டிட வேலை, கட்டிடக்கலை உட்பட, இயந்திரம், மின் மற்றும் பிளம்பிங் (MEP), காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) மற்றும் அனைத்து தொடர்புடைய பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பி. ராம்பிரசாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications