ஸ்ட்ரைட்டா ஸ்டேடியம் போயிடலாம்.. அதென்ன பச்சை வழித்தடம்.. சென்னையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு செம குஷி
சென்னை: சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் நடந்து வரும்நிலையில், தமிழக போக்குவரத்து கழகம் மட்டுமல்லாமல், சென்னை மெட்ரோவும் குட்நியூஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தீவிரமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்..
இந்த வருட ஐபிஎல் முதல் போட்டியே சென்னையில்தான் துவங்கியது.. ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவும், ஆர்சிபி- சிஎஸ்கே அணிகளும் மோதி ரசிகர்களை முதல்நாளிலேயே பரவசப்படுத்தியிருந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழக அரசு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை அன்றைய தினம் வெளியிட்டிருந்தது..

ரசிகர்கள்: அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டை கண்டுகளிக்க திரளும் ரசிகர்களுக்காகவே மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பஸ்கள் இன்றும் இயக்கப்பட உள்ளதாக கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ நிறுவனமும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. இன்று அதாவது 26-3-2024 மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை (27-03-2024 - 1.00 AM) மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று சர்ப்ரைஸ் தந்துள்ளது.
மெட்ரோ அதிரடி: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும்.
மேலும், போட்டிக்கு பிறகு, அரசினர் தோட்டம் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன்: ஆன்லைனில் (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc ) மூலம் பயணச்சீட்டை பெறலாம் அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம்.
மேலும், பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50/ செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம். இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.
பச்சை வழித்தடம்: மேலும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு இரயில்கள் இயக்கப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications