பயணிகள் வசதிக்காக... சென்னை மெட்ரோ ரயில்கள் சந்திக்க போகும் புதிய மாற்றம்!
பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் மக்களிடையே சென்னையில் வரவேற்பு அதிகரித்துள்ளதால் பெட்டிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்டிரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் எப்படி
இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எப்போது முடியும்
மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகளும் சென்னை நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறுநும் இரண்ட்ம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்காக, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் அமைக்கும் பணி சென்னை முழுவதும் தொடங்கி உள்ளது.

எப்படி இருக்கிறது
சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மற்றும் பீக் அவர்ஸ்களில் மெட்ரோவில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பலரும் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட மெட்ரோவில் பயணிப்பது நல்லது என்று முடிவு செய்து பயணிக்க தொடங்கி இருப்பதால் வருங்களில் இன்னமும் கூடுதலாக மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

6 பெட்டிகள்
இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications