ஃபுல் ஃபோர்ஸில் இறங்கிய சென்னை குடிநீர் வாரியம்.. கழிவுநீர் புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
சென்னை: சென்னைப் பெருநகர பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக சென்னை மாநகர் முழுவதும் களமிறங்கி, தண்ணீரை வடிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தினர். அதன் விளைவாக பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தபோதும், மழை விட்ட சில மணி நேரத்தில், சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது.
இந்நிலையில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கழிவுநீர் அகற்றும் பணியில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் ஆகியவை உள்ளன.
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை 2,149 களப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044 - 45674567 ஆகிய தொலைபேசி எண்ணையும், 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications