57 வயசில் விபச்சாரத்தில் ஈடுபட்டு அசிங்கப்பட்ட பெண்.. சென்னை எம்ஜிஆர் நகரில் பரபரப்பு.. சபாஷ் போலீஸ்
சென்னை: அனுமதியின்றி முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில், தொடர் ரெய்டுகளும், கைதுகளும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், இன்று சென்னை எம்ஜிஆர் நகரில் 57 வயதான பெண் கைதாகி உள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இங்கெல்லாம் விபச்சாரங்கள் நடப்பதும் பெருகி வருகின்றன.

கிராமப்புறங்களிலிருந்து வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரும் இளபெண்கள். சினிமா, டிவி சீரியல்களில் வாய்ப்பு தருவதாக சொன்னதை நம்பி ஏமாந்த பெண்கள், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகும் பெண்கள், என பலரும் இதுபோன்ற மசாஜ் சென்டர்களில் வந்து பாலியல் தொழிலில் சிக்கிவிடுகிறார்கள். இதில் பல வெளிமாநில பெண்களும் அடக்கம்.
எனவேதான், தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது உறுதியானால், அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்து வருகிறார்கள்.
30 வயது பிரேமா: 2 நாட்களுக்கு முன்புகூட, சென்னை அண்ணாநகரில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.. இதனால், மப்டியில் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானதையடுத்து, பிரேமா என்ற 30 வயது பெண்ணை கைது செய்தனர். அத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்களையும் பத்திரமாக மிட்டனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
ரகசிய தகவல்: "சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 23.01.2025 அன்று மதியம் எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கம் ஜல்லடியன் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரெஜினா (57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் மீட்கப்பட்டார்.
மகளிர் காப்பகம்: விசாரணையில் எதிரி ரெஜினா மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ரெஜினா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications