Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடங்களில் கட்டட கழிவுகள், மருத்துவக் கழிவுகளா?.. சென்னை மாநகராட்சியின் சூப்பர் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது இடங்களில் கட்டட கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பைகளை கொட்டினால் ரூ 5000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்ற பின்னர் தலைநகரில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிங்கார சென்னை 2.ஓ வின் ஒரு பகுதியாக குப்பை, கொசு, அசுத்தம் இல்லாத நகரமாக சென்னையை மாற்ற அவர் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள், டிரோன் மூலம் கொசு ஒழித்தல், சாலைகளின் தரத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.

பாடாய்படுத்தும் கொரோனா

பாடாய்படுத்தும் கொரோனா

இத்தனை பிரச்சினைகளுக்கு இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்தும் கொரோனாவையும் சென்னை ஒரு கை பார்த்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை குறைக்க ஆங்காங்கே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பணிகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே நீண்ட கால பிரச்சினையாக இருப்பது குப்பைகள். அதாவது மருத்துவக் கழிவுகள், கட்டட கழிவுகளை காலி இடங்களில் சாலையோரம் ஏற்கெனவே குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடத்தில் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. திக்கப்பட்டு அனைத்து பணிகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே நீண்ட கால பிரச்சினையாக இருப்பது குப்பைகள். அதாவது மருத்துவக் கழிவுகள், கட்டட கழிவுகளை காலி இடங்களில் சாலையோரம் ஏற்கெனவே குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடத்தில் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

கொரோனா சமயத்தில் மருத்துவ கழிவுகள்

கொரோனா சமயத்தில் மருத்துவ கழிவுகள்

கொரோனா சமயத்தில் மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதால் எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் சென்னை மாநகராட்சிக்கு புகைப்படத்துடன் புகார் கொடுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் குப்பை கொட்டுதலை தடுக்க மாநகராட்சி ஒரு முடிவு எடுத்துள்ளது.

மாநகராட்சி அறிக்கை

மாநகராட்சி அறிக்கை

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

15 இடங்கள்

15 இடங்கள்

பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை இந்த இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும். இதை மீறும் நபர்களின் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன் படி பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.2000/-மும், 1 டன் அளவிற்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் கட்டட கழிவுகள்

பொது இடங்களில் கட்டட கழிவுகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில்ல் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை அறிந்த பின்னராவது குப்பைகளை கொட்டுவதை மக்கள் நிறுத்துகிறார்களா, இல்லை நோ பார்க்கிங் என போர்டு வைத்த இடத்திலேயே வாகனத்தை நிறுத்துவதை போல் குப்பைகளை கொட்டுவார்களா என்பது போக போகத்தான் தெரியும்.

எந்த மாநகராட்சி

எந்த மாநகராட்சி

சென்னை மாநகராட்சி மட்டுமல்ல எந்த மாநகராட்சி , நகராட்சியாக இருந்தாலும் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அடுத்த கனமே நடவடிக்கையில் இறங்கிவிடுகிறார்கள். அபார்ட்மென்ட்கள், முக்கிய வீதிகளில் குப்பை வண்டிகள் தினந்தோறும் வரும். ஆனால் சில இடங்களில் வருவதில்லை. இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு குப்பை வண்டிகள் அனைத்து இடங்களிலும் வந்து குப்பை சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். கட்டட கழிவுகளையும் சாலைகளிலோ காலி மனைகளிலோ கொட்டுவதற்கு பதிலாக கிலோவுக்கு இத்தனை ரூபாய் என ஒரு தொகையை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பெற்றுக் கொண்டு அந்த குப்பையை சேகரிக்கலாம். அவ்வாறு செய்தால் சாலைகளில் கொட்டப்படுவது ஓரளவுக்கு குறையும். மக்களும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அரசுக்கு உதவ வேண்டும். நம் வீடு சுத்தமாக இருப்பதை விரும்புவதை போல் அடுத்தவரின் காலி மனையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் சிங்கார சென்னை 2.ஓ மட்டுமல்ல தமிழகத்தையே அழகுப்படுத்தும் எந்த திட்டமானாலும் வெல்லும் என்பதில் துளி கூட சந்தேகமே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+