பாதி சென்னையில் முழுசா ரோடு இல்லை.. இணைப்பு சாலைகளில் எல்லாம் குழி.. மாநகராட்சி செய்த அவசர வேலை
சென்னை: பாதி சென்னையில் முழுமையாக ரோடு இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். எல்லா இணைப்பு சாலைகளும் குண்டும் குழியுமாக இருந்ததால் மழை நீர் பல இடங்களில் தேங்கியது. பள்ளத்தில் ஆபத்தான முறையிலேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே சென்னை மாநாகராட்சி அவசரமாக கற்களை கொட்டி மூடும் பணியில் இறங்கி உள்ளது.
காலையில் கூகுளில் பார்க்கும் போதே சிவப்பு தக்காளிகள் சென்னை மேல் படர்ந்து இருந்தன. சென்னையில் சுழன்றபடி இருந்த நிலையை பார்த்த வானிலை ஆய்வாளர்கள்.. இன்றைக்கு சாத்து சாத்துன்னு சென்னையில் மழை சாத்த போகுது.. 20 செமீ மழை பெய்யலாம் என்று எச்சரித்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் இரவு முழுவதும் விட்டு விட்டு மென்மையாக பெய்த மழை, காலையில் நின்றுவிட்டது. இதனால் காலை வானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என்று ஏங்கிய மாணவர்கள் ஏமாந்து போனார்கள்.. அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிய போதுதான், மழை தனது ஆட்டத்தை ஆரம்பித்தது..
சென்னையில் காலை 9 மணிக்கு மேல் தான் மழை ஆரம்பித்தது.. காலை 9 மணிக்கு தொடங்கிய மழை மாலை 4 மணி வரையிலும் வெளுத்து வாங்கியது. குறிப்பாக காலை 9 முதல் 12 மணி வரை கனமழை கொட்டியது.. அதன்பிறகு விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
கனமழை காரணமாக சென்னையில் ஏற்கனவே மோசமாக இருந்த சாலைகள் மொத்தமாக கரைந்தன. இணைப்பு சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருந்ததால் அந்த இடங்களில் தண்ணீர் போய் தேங்கி கொண்டது. வாகன ஓட்டிகள் எங்கு பள்ளம் இருக்கிறது.. எங்கு சாதாரணமாக இருக்கிறது என்று தெரியாமல் பள்ளங்களில் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சென்னையின் புறநகர் பகுதிகள், உண்மையில் பெரும் பாவம் என்பது இன்றைய மழை புரிய வைத்தது. பல சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஏற்கனவே இருந்த நிலையில், இந்த மழை,, சின்ன சின்ன பள்ளங்களை அண்டா பள்ளங்களாக மாற்றியது,. தாம்பரம், முதல் கோவிலம்பாக்கம் வரையிலும் சோழிங்கநல்லூர் முதல் பள்ளிக்கரணை வரையிலும் பல்வேறு இடங்களில் இணைப்பு சாலைகள் மிகவும் மோசமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
இதேபோல் சென்னை நகருக்குள்ளேயும் பல்வேறு பகுதிகளில் இணைப்பு சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தது. பாதி சென்னையில் ரோடுகள் முழுமையாக மழைக்கு இரையாகின. மழை மொத்தமாக சென்னையின் பல்வேறு சாலைகளை காலி செய்துவிட்டது. சாலைகளில் பள்ளம் என்பது போய், பள்ளத்தில் தான் சாலை ஆங்காங்கே இருக்கிறது என்கிற நிலை ஏற்பட்டது.

இதனிடையே சாலைகளில் மோசமான பள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில், கொட்டும் மழையிலும் சல்லிகற்களை கொட்டி பள்ளங்களை மாநகராட்சி பணியாளர்கள் மூடி வருகிறார்கள். எனவே உங்கள் பகுதியில் மோசமான பள்ளம் இருந்தால், அல்லது தண்ணீர் அதிகமாக தேங்கினால் உடனே மாநகராட்சியை அழைத்து புகார் கூறுங்கள்.. புகாரின் அடிப்படையில் சாலைகளை சரிசெய்வது, தண்ணீரை வெளியேற்றுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் கவனமாக இருப்பது நல்லது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications