மயிலாப்பூரில் மாற்றம்.. நாளை முதல் அந்த பக்கமா போகாதீங்க.. அட சென்னை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி விழா
சென்னை: கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் வரும் 12ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், கோவில் பங்குனி திருவிழா நிகழ்ச்சி நிரல் குறித்த முழு விவரம் வெளியாகி உள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: "அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்திர பங்குனிவிழா இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கீழ்க்கண்டவாறு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது
போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் இடங்கள்

- தேவடி தெருவிலிருந்து- நடுத்தெரு மற்றும் சித்ரகுளம்
- நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து - கிழக்கு மாட தெரு
- வடக்கு சித்ரகுளத்திலிருந்து - கிழக்கு மாட தெரு
- மேற்கு சித்ரகுளம் தெருவிலிருந்து - தெற்கு மாட தெரு
- டி.எஸ்.வி கோயில் தெருவிலிருந்து - தெற்கு மாட தெரு
- ஆடம்ஸ் தெருவிலிருந்து - தெற்கு மாட தெரு
- ஆர்.கே. மடம் சாலையிலிருந்து - தெற்கு மாட தெரு
- ஆர்.கே. மடம் சாலையிலிருந்து - வடக்கு மாட தெரு
- கச்சேரி சாலையிலிருந்து - மத்தள நாராயணன் தெரு
- கிழக்கு அபிராமபுரத்திலிருந்து - வெங்கடேசஅக்ரஹார தெரு
- புனிதமேரி சாலையிலிருந்து - ஆர்.கே. மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி
- டாக்டர் ரங்கா சாலையிலிருந்து - வெங்கடேச அக்ரகாரம் சாலை
- முண்டககன்னியம்மன் கோயில் தெருவிலிருந்து- கல்விவாறு தெரு நோக்கி
- முண்டககன்னியம்மன் கோயில் தெருவிலிருந்து - கச்சேரிசாலை நோக்கி
ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ்சாலை, சீனிவாச அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாறு டூ லஸ் சந்திப்பு
அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை ெநடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
மேலும் வரும் 5ம் தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், வரும் 9ம் தேதி தேர்திருவிழா அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் வரும் 10ம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
வாகனங்களை நிறுத்த ஏற்பாடு
அதைப்போன்று வரும் 5ம் தேதி அதிகாரதந்தி திருவிழா 9ம் தேதி தேர்திருவிழா, 10ம் தேதி அறுபத்துமூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 100 இரு சக்கர வாகனம் மற்றும் 30). ராயபேட் நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இரு சக்கர வாகனம் மற்றும் 15 கார்).
ஒத்துழைப்பு தர வேண்டும்
செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இரு சக்கர வாகனம் மற்றும் 80 கார்).
காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது(100 இரு சக்கர வாகனம் மற்றும் 20 கார்). வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications