அர்த்த ராத்திரியில் சபலப்பட்ட மயிலாப்பூர் இளைஞர்.. இன்ப பரிசை எதிர்பார்த்து போனவருக்கு நடந்த ஏடாகூட சம்பவம்
சென்னை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆபாச செயலியில் அறிமுகம் இல்லாத நபரிடம் பேசி, அவரது பேச்சை நம்பி தனிமையில் சந்திக்க போயிருக்கிறார். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தன்னுடைய செயல் எவ்வளவு முட்டாள்தனம் என்பது தெரியவந்துள்ளது. அப்படி என்னதான் கல்லூரி மாணவருக்கு நடந்தது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் லெவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இந்த இளைஞர் இசைக் கல்லூரியில் படித்து வருகிறார். எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கும் லெவின், சமூக வலைத்தளங்கள் மட்டும் பயன்படுத்தி வராமல் வில்லங்க செயலியையும் பயன்படுத்தியிருக்கிறார்.

இன்ப பரிசு காத்திருக்கிறது
அதாவது, கிரைண்டர் என்ற டேட்டிங் செயலியை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த செயலியில், எதாவது புது நட்பு கிடைக்குமா? என வலை வீசிய லெவினுக்கு மனதை மயக்கும் குரலில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தொலைபேசியில் பேசிய அந்த பெண், மயிலாப்பூர் வடக்கு மாட வீதி அருகே வந்தால் இன்ப பரிசு காத்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
ஏடாகூடமாக வீடியோ எடுத்த கும்பல்
இதைக் கேட்டதும், இன்ப அதிர்ச்சி அடைந்த கவுதம், அந்த பெண் கூறியபடி நள்ளிரவு 12 மணிக்குப் மேல், ஆள் நடமாட்டம் ஒதுங்கிய பிறகு, இன்ப அதிர்ச்சியை பார்க்க சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், அருகில் இருந்த கழிவறைக்கு இழுத்து சென்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். மேலும் அவரை கொடூரமாக தாக்கியதோடு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கையில் பணம் இல்லாததால், கூகுள் பே வாயிலாக ரூ.1,300 பணத்தை அக்கவுண்டிற்கு மாற்ற சொல்லி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன லெவின் பணத்தையும் அனுப்பியுள்ளார். அதோடு விடாமல், கவுதமையை ஏடாகூடமாக வீடியோ எடுத்த அந்த கும்பல், இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால், அவ்வளவுதான்.. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
துணிச்சலாக போலீசிடம் சென்ற இளைஞர்
எனினும், இளைஞர் கவுதம் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். கூகுள் பே வாயிலாக பணத்தை திருடியதால் கவுதமிடம் பணம் பறித்த இருவரையும் போலீசார், உடனடியாக பிடித்தனர். விசாரணையில், கவுதமிற்கு ஆசை வலையை விரித்த நூதன வழிப்பறியில் ஈடுபட்டது மயிலாப்பூர் மாங்கொல்லை கார்டன் பகுதியை சேர்ந்த சூர்யா, அஜய் என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இருவரும் கைதாகியுள்ளனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பழகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் தனிப்பட்ட விவரங்களையோ, புகைப்படங்களையோ பகிர்ந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார், ஆன்லைனில் பழகியவர்களை நம்பி தனியாக செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். சமீபகாலமாக கிரைண்டர் போன்ற டேட்டிங் செயலிகளில்தான் அதிக அளவில் குற்ற நிகழ்வுகள் நடப்பதால் இத்தகைய செயலிகளை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications