நந்தனம் அரசு கலைக்கல்லூரி பெயர் மாற்றம்.. இனி பெண்களும் பயிலலாம்.. இருபாலர் கல்லூரியாக மாற்றி அரசாணை
சென்னை: சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி இந்த ஆண்டு முதல் இருபாலருக்கான கலைக்கல்லூரியாக செயல்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் இதுவரை மாணவர்கள் மட்டுமே படித்து வந்த இந்த கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவிகளும் படிக்க முடியும்.
சென்னையில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற கல்லூரியில் ஒன்று நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி. கடந்த 1969 ம் ஆண்டு முதல் ஆடவர் கல்லூரியாக இது செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு இந்த கல்லூரியை ஆண், பெண் என இருபாலரும் பயிலும் வகையிலான இருபாலர் அரசு கலைக்கல்லூரியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
அதாவது சென்னை அருகே குன்றத்தூர், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் அரசு இருபாலர் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதனால் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை சரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இளநிலை வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்தது. இதனால் நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றினால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பயிலலாம். இதனால் கல்லூரியில் சேர்க்கையும் அதிகரிக்கும் என அரசு திட்டமிட்டது.
மேலும் நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்பது இருபாலர் பயிலும் வகையிலான அரசு கலைக்கல்லூரியாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில், 2024-25 கல்வியாண்டு முதல் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்பது இருபாலர் கல்லூரியாக செயல்படும். இந்த கல்லூரி இனி அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்பதற்கு பதில் அரசு கலைக்கல்லூரி என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த கல்லூரியின் பெயர் மாற்றம் உள்பட அனைத்து விஷயங்களும் கல்லூரி ஆட்சி மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications