வந்தே பாரத் ரயிலில் அதை கவனிச்சீங்களா.. சென்னை - நெல்லை வந்தே பாரத்தில் இடம்பெற போகும் 248 விஐபிகள்
சென்னை: நாளைய தினம் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில்சேவை துவங்க உள்ள நிலையில், அதுகுறித்த, ஆச்சரிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அத்துடன், அந்த ரயிலில் உள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது... இதைத்தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என எல்லா மாநிலங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் சேவை இயங்கி வருகிறது.
வரவேற்பு: மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பல்வேறு நகர மக்கள் வந்தே பாரத் ரயிலை அதிக அளவில் வரவேற்கிறார்கள்.சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த காரணத்தால், தமிழ்நாட்டிலேயே அதிக லாபம் ஈட்டும் ரயில் வழித்தடமான சென்னை நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாகவே எழுந்து வந்தது.

இதற்கு மத்திய அரசு அனுமதியும் தந்துவிட்டது. பிறகு உடனடியாக, தெற்கு ரயில்வே சார்பில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க பணிகளும் துரிதமாகின.
நாளை துவங்கும் சேவை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் ஆகியவை வேகமாக முடிக்கப்பட்டன. நாளை 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.
முன்னதாக, அந்த ரயில், எங்கெல்லாம் ரயில் நிற்கும் என்ற லிஸ்ட்டையும் வெளியிட்டிருந்தது. அதில், சென்னையை விட்டால், அத்துடன், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. சென்னையில் தாம்பரத்தில் நெல்லை வந்தே பாரத் நிற்காது என்பது, சென்னை மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது..
தென்மாவட்டங்கள்: காரணம், தென்மாவட்ட மக்கள் பலரும் தெற்கு ரயில்வேயிடம் தாம்பரத்தில் வந்தே பாரத் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையும் தற்போது ஏற்கப்பட்டு, நெல்லை வந்தே பாரத் ரயில் தாம்பரத்திலும் நிற்கும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் 1400 முதல் 1500 வரை வசூலிக்கலாம் என தெரிகிறது. எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ 3000 வரை டிக்கெட் விற்பனை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இதைத்தவிர, உணவு வேண்டுமானால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமாம்..
ஸ்பெஷல் பயிற்சி: இந்நிலையில், உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயிற்சி பெற்ற லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளது, பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..
இந்த வந்தே பாரத் ரெயில்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் இயக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.. மொத்தமாக வந்தே பாரத் ரெயிலுக்காக 248 லோகோ மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை, காசியாபாத்தில் உள்ள மின்சார கருவிகள் பயிற்சி மையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது..
ஸ்பெஷல் வசதிகள்: இந்த ரெயிலில் உள்ள டிரைவர் ரூம் படுஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. அதாவது, ரெயிலை எளிதாக இயக்க வசதியாக பெரிய திரை, பணி சூழலுக்கு ஏற்றவாறு இருக்கை வசதி, அதிக இட வசதி, ரெயில்வே பாதுகாவலரிடம் பேசும் வசதி, ரெயில் முன் மற்றும் பின் பக்கங்களில் காமிரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட நவீன வசதிகள் எல்லாம் இந்த நெல்லை வந்தே பாரத் ரயிலில் உள்ளதாம்.
ஆக, எப்படி பார்த்தாலும், சென்னை - நெல்லை சென்றடைய சராசரியாக 11 மணி நேரம் வரை ஆகும் நிலையில், இப்போது, வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்திற்கு உள்ளாகவே சென்று சேர்ந்துவிடும் என்பதால், இந்த ரயிலின் மீதான எதிர்பார்ப்பு கூடிவருகிறது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications