சென்னை- நெல்லை வந்தே பாரத் எங்கெல்லாம் நிற்கும்? மதுரையைவிட்டா அடுத்து வேறு எங்காம்?
சென்னை: சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.

நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணிக்கு நேரம்தான் ஆகிறது.
இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை-- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளததை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கப்படும். சூப்பர் பாஸ்ட் ரயில்கள் மூலம் மேற்கண்ட வழித்தடத்தில் 10 மணி நேரம் பயணிக்கப்படும். வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என தெரிகிறது.
நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில் சென்னையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக தென் தமிழகத்திற்கு செல்லும் ரயில்கள் எழும்பூரிலிருந்துதான் புறப்படும். ஆனால் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டால் நிறைய பேர் பயனடைவார்கள் என கூறுகிறார்கள். அதனால் ரயில்வே நிர்வாகம் அதுகுறித்து யோசனையில் இருந்து வருகிறது.
ஏசி சேர் கார் பயண கட்டணம் ரூ 3000 வரை இருக்கலாம் என தெரிகிறது. எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் அல்லது 1500 ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உணவும் வழங்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயிலின்பராமரிப்பு பணிகள் இந்த ஜூலை மாதம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications