"சித்தப்பா".. சென்னை அமைந்தகரை ரோட்டில் "அந்த" கார்.. கிட்ட போய் பார்த்தால்.. நொந்துபோன நொளம்பூர்
சென்னை: சென்னை நொளம்பூர் சாலைகளில், யார் அந்த மர்மநபர் என்று தெரியாமல் போலீசார் திணறிவிட்டார்கள்.. என்ன நடந்தது?
2 மாதங்களுக்கு முன்பு, தமிழக- கேரள எல்லைப்பகுதியான வாளையாறு அடுத்த புதுச்சேரி குருடிக்காடு என்ற இடத்தில், கஸ்பா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இனோவா கார் வந்துள்ளது.

வழக்கம்போல சோதனை செய்வதற்காக அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த காரோ, போலீஸாரையே இடிப்பது போல வந்து, பிறகு, சர்ரென வேகமாக பறந்துவிட்டது. உடனே போலீசார் அந்த கார் யாருடையது என்று விரட்ட துவங்கினார்கள்.
ஹவாலா: அடுத்த சில நிமிஷத்துலேயே அந்த காரை மடக்கி பிடித்தனர்.. உடனே அந்த காருக்குள்ளே சோதனையிட்டார்கள்.. ஆனால், எதுவுமே கிடைக்கவில்லை.. ஆனால், அந்த காரின் அமைப்பில் ஏதோ மாற்றம் இருப்பதை போல தெரிந்தது. இதை பார்த்து குழம்பி போன போலீசார், இனோவா காரை, அக்கு வேறு ஆணிவேறாக சோதனையிட்டனர். அப்போது காருக்குள் "ரகசிய ரூம்" போல ஒரு பகுதி உருவாக்கப்பட்டு, அதில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து, கடத்த முயன்றது தெரியவந்தது.
அந்த பணத்தின் மதிப்பு ரூ.1.90 கோடியாகும்.. அதற்கான முறையான ரசீதும் காரில் வந்த 2 பேரிடம் இல்லை. ஒருவர் மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமது குட்டி, இன்னொருவர் புத்தனங்காடியை சேர்ந்த முகமது நிசார்..
அதிர்ச்சி: கோவையில் இருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க 2 பேரும் சென்று கொண்டிருந்தார்களாம். அப்போதுதான் பிடிபட்டுள்ளனர். இந்த ரூ.1.90 கோடி பணம் யாரிடமிருந்து வந்தது? யாருக்கு செல்கிறது? என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே இன்னொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது..
அமைந்தகரை போலீசாருக்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்திருக்கிறார்.. அதில் பேசியவர், "அமைந்தகரை ரோட்டில், ஹவாலா பணத்தை எடுத்துக்கொண்டு, மர்மநபர் வாகனத்தில் தப்பி சென்று கொண்டிருக்கிறார்" என்று தகவல் தந்துவிட்டு போனை துண்டித்துள்ளார். ஆனால், அவர் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை.
கண்காணிப்பு: இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்து, உடனடியாக, மாறுவேடத்தில் அமைந்தகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமான கண்காணிப்பில் இறங்கினார்கள்.. வாகனத்தில் தப்பி செல்கிறார் என்று தகவல் கிடைத்ததே தவிர, எந்த வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரம் தெரியவில்லை.. அதனால், போலீசார், எந்த வண்டியை சோதனை செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் மறுபடியும் போலீசாருக்கு போன் செய்தார்.. "அந்த அடையாளம் தெரியாத வாகனம், இப்போது உங்களை தாண்டி சென்றுவிட்டது.. இப்போது அந்த வாகனம், நொளம்பூர் பகுதியில் நிற்கிறது பாருங்கள்" என்று முழு அட்ரஸையும் சொல்லிவிட்டு, மறுபடியும் போனை துண்டித்துவிட்டார்.
நொளம்பூர்: இதையடுத்து, போலீசார் நொளம்பூர் பகுதியிலிருக்கும் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றார்கள்.. அப்போது இளைஞர் ஒருவர், போலீசாரை பார்த்ததுமே அங்கிருந்து எகிறி குதித்து தப்பி செல்ல முயன்றார். ஆனால், அதற்குள் போலீசார், இளைஞரை சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர். விசாரணையும் நடத்தப்பட்டது.
அவர் பெயர் அப்துல் ஹமீது.. 26 வயதாகிறது.. ஹவாலா பணம் பரிமாற்றும் செய்வதற்காக பணம் மற்றும் நகைகளை நொளம்பூர் பகுதியிலிருக்கும் தன்னுடைய சித்தப்பா வீட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்... உடனே போலீசார், சித்தப்பா வீட்டை சோதனை நடத்தினார்கள்.. அங்கே 1 கோடியே 18 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். அத்துடன், 50 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணை: இதுசம்பந்தமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தந்தனர்.. அதிகாரிகள் விரைந்து வந்து, அப்துல் ஹமீதுவை கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. போலீசாருக்கு தகவல் தந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்று தெரியவில்லை.. அந்த சித்தப்பா என்ன ஆனார் என்றும் தெரியவில்லை.. போலீசார் விசாரிக்கிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications