வடசென்னை லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: மீண்டும் வெற்றி மகுடம் சூட்டிய கலாநிதி வீராசாமி
சென்னை: திமுக கோட்டைகளில் ஒன்றான வட சென்னை தொகுதியில் மீண்டும் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று இருக்கிறார்.
சென்னையில் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வடசென்னை. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி உள்ளார்.

மீண்டும் கலாநிதி வீராசாமி திமுக சார்பில் இந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால்கனகராஜ், சீமானின் நாம் தமிழர் சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெளியான முடிவுகளின் படி திமுக வேட்பாளரான ஆற்காடு வீரசாமியின் மகன் கலாநிதி வீராசாமி 497333 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோகர் 158111 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து பாஜக சார்பில் பால் கனகராஜ் 113318 வாக்குகளும், நாம் தமிழர் சார்பில் அமுதினி 95954 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர்.
இந்த தொகுதியில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர் (தனி). இந்த 6 தொகுதிகளிலும் எம்எல்ஏக்களாக திமுகவினர் தான் உள்ளனர். இதில் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளார்.
1957 முதல் வடசென்னைதொகுதி மொத்தம் 16 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 10 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும், ஒருமுறை சுயேச்சையும் வென்றுள்ளனர். கடந்த 1996ல் இருந்து மொத்தம் 7 முறை லோக்சபா தேர்தல் நடந்த நிலையில் 2014ல் மட்டும் அதிமுக வேட்பாளரிடம் திமுக வேட்பாளர் தோற்றார். அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தலில் கலாநிதி வீராசாமி வென்று தொகுதியை மீட்டார்..
இந்த தொகுதி 16 லோக்சபா தேர்தல்களை சந்தித்து இருந்தாலும் கூட 2000ம் ஆண்டுக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தல்களின் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் நிலவரம் பற்றிய விபரம் வருமாறு:
2004 ம் ஆண்டு தேர்தல் முடிவு
சி குப்புசாமி (திமுக) - 5,70,122 (வெற்றி)
எம்என் சுகுமார் நம்பியார் (பாஜக)- 3,16,583
முத்து குணசேகரன் (ஜேடியூ) - 4,512
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
டிகேஎஸ் இளங்கோவன் (திமுக) - 2,81,055
தா.பாண்டியன் (இ.கம்யூ) - 2,61,902
யுவராஜ் (தேமுதிக) - 66,375
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) - 23,350
2014 ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
வெங்கடேஷ் பாபு (அதிமுக) 4,06,704
கிரிராஜன் (திமுக) - 3,07,000
பிஜு சாக்கோ (காங்கிரஸ்) - 23,751
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கலாநிதி வீராசாமி (திமுக)- 5,90,986
மோகன்ராஜ் (தேமுதிக)-1,29,468
மவுரியா (மநீம) - 1,03,167
காளியம்மாள் (நாம் தமிழர்) 60,515
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications