சென்னை பெரம்பூரில் 4வது முனையம் மட்டுமல்ல.. அம்பத்தூர் வரை 2 புதிய ரயில் பாதை.. ரயில்வே குட்நியூஸ்
சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது ரயில் முனையமாக மாற்றிட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில்,சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய முனையங்கள் உள்ளன. பெரம்பூரை ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்றால், பெரம்பூர் முதல் அம்பத்தூர் இடையே 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும். எனவே அதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்த நிலையில், ரூ.182 கோடியில் 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையின் மிக முக்கியமான ரயில்,ஏன் தமிழ்நாட்டிலேயே மிக முக்கியமான ரயில் நிலையம் என்றால் அது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான். சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்கள், வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் செல்கின்றன. தேனி, பழனி உள்பட தென்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கும் ஒரு சில ரயில்கள் செல்கின்றன. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்குள் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலத்தவர் வருகையும் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இயக்க முடியாத நிலையில் தெற்கு ரயில்வே இருக்கிறது.

சென்னை சென்ட்ரல்
ஏனெனில் பெரும்பாலான வடமாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து தான் ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூருக்கு அடுத்தபடியாக தாம்பரத்தில்உள்ளது போல் முனையம், சென்ட்ரல் வழித்தடத்தில் இல்லை.. எனினும் பயணிகள் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் வரும் போது மட்டும் ரயில்கள் நின்றுசெல்கின்றன. பெரம்பூரை பொறுத்தவரை சென்ட்ரலில் இந்து வெறும் 8 கிமீ தூரம் தள்ளி தான் இருக்கிறது.
ஆவடி நிராகரிப்பு
ஆவடியை நான்காவது முனையமாக மாற்றலாம் என்றால் அங்கு, தாம்பரம் போல் கட்டமைப்புகள் கிடையாது. அதேநேரம் பெரம்பூரிலுமே அப்படியான கட்டமைப்பு இல்லை. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக பெரம்பூரில் புதிய ரயில் முனையத்தை உருவாக்கி,அங்கிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரயில் நிலையம் ரூ.360 கோடியில் 4-வது புதிய ரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. இங்கு பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
ரயில் பாதைகள்
பெரம்பூர் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்றிட, ரயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. அத்துடன் பெரம்பூர்-அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5, 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை 4-வது புதிய முனையமாக மாற்றவும், கூடுதலாக 5, 6-வது பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
பெரம்பூரில் 4வது ரயில் முனையம்
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை 4-வது ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் வழங்கி உள்ளோம். ரூ.360 கோடியில் 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
பெரம்பூர்-அம்பத்தூர் 5வது, 6வது பாதை
அதன்படி, 2028-ம் ஆண்டு இறுதிக்குள் புதிய ரயில் முனைய பணிகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த முனையத்துடன் சேர்த்து, பெரம்பூர்-அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரயில் பாதைகளும் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்தூரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை எளியதாக இயக்க முடியும். பெரம்பூரில் தற்போது, 4 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளது" இவ்வாறு கூறினார்கள்.
-
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications